"பச்சையா மாட்டிக்கிட்டாரு" எடப்பாடி பழனிசாமி சித்துவேலை.. திமுகவின் B டீம்: சீறும் ஓபிஎஸ் டீம்
சிலுவம்பாளையம் பழனிசாமி திமுகவுடன் மறைமுக உறவு வைத்துள்ளார் என்கிறது ஓபிஎஸ் டீம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார், மறைமுக உறவை கொண்டுள்ளார் என்ற விஷயத்தை ஓபிஎஸ் தரப்பு மீண்டும் ஒருமுறை கையில் எடுத்துள்ளது.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 3 பேர், ஒரே நாளில், ஒரே கருத்தை முன்வைத்துள்ளது, எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை கூட்டி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே, "எடப்பாடி பழனிசாமி துரோகி" என்ற வாசகத்தை ஓபிஎஸ் டீமும், ஓபிஎஸ் துரோகி என்று எடப்பாடி டீமும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தன.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் சில அதிர்வலைகளை ஓபிஎஸ் கூடாரத்தில் ஏற்படுத்தியதாக தெரிகிறது.. ஓபிஎஸ்ஸையும், அவரது ஆதரவாளர்களையும் எந்த காரணம் கொண்டும் சேர்த்து கொள்ளக்கூடாது என்ற முழக்கம் அதிர ஒலித்தது..

நத்தம் நத்தம்
குறிப்பாக, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், போன்றோர் வழக்கத்துக்கும் மாறாக, ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவே பேசியிருந்த நிலையில், அவர்களை குறி வைத்துதான், ஓபிஎஸ் டீம் தற்போது அரசியல் செய்ய துவங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், திமுகவுடன் எடப்பாடிக்கு மறைமுக உறவு என்று கூறி, எடப்பாடி பழனிசாமியைவிட, ஜெயக்குமாரையே பெரும்பாலும் திட்டித்தீர்க்க துவங்கி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில், 3 ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரே மாதிரியான புகார்களை கூறி, பேட்டிகளை தந்துள்ளது, கவனம் பெற்று வருகிறது.. அவைகளின் தொகுப்புதான் இது:

சிலுவம்பாளையம்
தேனி கண்ணன்ஜி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டி இதுதான்: "ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, சிலுவம்பாளையம் பழனிசாமி, உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், இப்படி 7,8 பேர் இருக்கிறார்கள்.. இவர்களை மட்டும் நீக்கிவிட்டால் போதும், அதிமுக புத்துயிர் பெறும். பட்டொளி வீசி பறக்கும்.. விரைவில் அது நடக்கும்.. இதில் ஜெயக்குமார் எப்படி என்றால், சொந்த வீட்டிற்கே தீ வைத்து கொளுத்துவது, மல்லாக்க படுத்துக் கொண்டு, எச்சில் துப்புவது போன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.. அவர் எதுக்காக வருத்தப்படறார்? எதுக்கு சந்தோஷப்படறார் என்பது எதுவுமே தெரியாது.. ஆனால் செய்வதை எல்லாம் பார்த்தால், சின்னப்பிள்ளைங்க செய்யும் சித்துவேலை மாதிரியே தெரியும்.. ஒரு தலைவனுக்குரிய தகுதியாக அவைகள் இருக்காது.

B டீம் யார்
யாரை பார்த்து B டீம் என்கிறார்கள்? அதிமுகவை ஒற்றுமைப்படுத்தி, திமுகவை வலுவாக எதிர்த்து, திமுகவை ஒரேடியாக அழித்துவிட வேண்டும் என்று சொல்வது ஓபிஎஸ்தான்.. ஆனால், அதிமுகவை 2ஆக பிளந்து, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி, மறைமுகமாக கூட்டணி வைத்துக் கொண்டு, "எக்காலத்திலும் அதிமுகவை ஜெயிக்க விடமாட்டேன், நீங்கள் சொன்னதை நான் கேட்பேன், என் மீது மட்டும் வழக்கு எதுவும் போட்டுடாதீங்க, ஜெயில்ல தூக்கி வெச்சிடாதீங்க" என்று மறைமுக அஜெண்டாவில் செயல்படுவது சிலுவம்பாளையம் பழனிசாமி.. திமுகவின் B டீம் யார் என்று நீங்களே சொல்லுங்கள்.

சுனில் மெயின்
திமுகவை வளர்க்க நினைப்பவர்தானே, திமுகவுக்கு B டீம் ஆக இருக்க முடியும்? மறைமுக கூட்டணி வைத்து கொண்டிருப்பவர்கள் யார் என்பது அனைவருக்குமே தெரியும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு அடிவருடிகளாகவே இவர்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.. இதை தொண்டர்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருபக்கம் காங்கிரசுக்கு மறைமுகமாக பேரம் பேசுகிறார் பழனிசாமி.. சுனில் போன்ற ஆட்களை வைத்து தூது அனுப்புகிறார்.. மற்றொருபக்கம் பாஜகவையும் கூட்டணியில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்.. ஆனால், பாஜகவுக்கு எதிரான விஷயங்களை, அதிமுகவுக்கு அல்லாதவர்களை வைத்து பேசவைப்பது, பிறகு, அப்படி பேசியவர்கள் எல்லாம் அதிமுகவினரே கிடையாது என்று மறுப்பது, இப்படியெல்லாம் செய்து, பாஜகவை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

சிலுவம்பாளையத்தில்
நான் சிலுவம்பாளையும் பழனிசாமியிடம் இதன்மூலம் சொல்லிக் கொள்வது, அத்தனை தில்லாலங்கடியையும், தில்லுமுல்லுகளையும், மத்திய உளவுத்துறையும், இங்கிருக்கிற பாஜக விசுவாசிகளும், முக்கிய நபர்களும், கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால், இதை பழனிசாமி உணர்ந்திருக்கிறாரா? என்று தெரியவில்லை.. அல்லது உணர மறுக்கிறாரா? என்றும் தெரியவில்லை.. இவரெல்லாம் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்திருப்பார். ஒருங்கிணைப்பாளருக்கும், விகே சசிகலாவுக்கும் இடையே நடந்த விபத்தில் நடந்த விபரீதம்தான் இந்த சிலுவம்பாளையம் பழனிசாமி. இந்த விபத்தில் வந்த விபரீதமே தன்னை ஒருதலைவனாக நினைத்துகொண்டிருந்தால், மக்கள் தூக்கி எறியவே செய்வார்கள் என்றார்.

மவுன புரட்சி
மருதுஅழகுராஜ் சொல்லும்போது, "ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு தான் நியாயமானது என்று தொண்டர்கள் அறிந்துள்ளனர். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டாக்கியவர் ஜெயக்குமார்... அதிமுக பிளவால் திமுக தேர்தல்களில் வெல்லும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம்... எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஒரு மவுன புரட்சி தொடங்கியுள்ளது. கடைக்கோடி தொண்டர்களும் ஓபிஎஸ்- ந் நிலைபாடுதான் நியாயமானது என ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

போலியோ போலி
இதனால் பலரும் எடப்பாடியை விட்டு விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதற்காகவே அவசரக் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பட்டுவாடா செய்தார். அப்படி கொடுக்கப்பட்ட பணத்தில் தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக சொல்கிறார்கள்.. இதுகுறித்து போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஐ அரசியல் போலி என்றால், அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ பற்றி பேச தகுதியில்லை. மக்களால் அங்கிகரீக்கப்பட்டவர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத். ஒற்றை தலைமைக்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என்றார்.

பருப்புகள்
புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவை உடைத்து இபிஎஸ் என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார்.. கொடநாடு கொலை வழக்கு உட்பட பல கேஸ்கள் அவர்மீது நிலுவையில் உள்ளன.. முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது.

மாறும் பேச்சு
இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் எல்லாருமே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.. எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார்" என்றார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications