பாமகவிற்கு வாக்கு போடக்கூடாது.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. போனை போட்டு உத்தரவிட்ட எடப்பாடி? ஏன்?
சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக முடிவு: விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக மாறி உள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி திமுகவிற்கு எதிராக போட்டியிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது போக இங்கே நாம் தமிழர் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு, அக்கட்சியை மேலும் வலுவிழக்கவே செய்யும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. இது ஜெயலலிதா எடுக்காத அரசியல் முடிவு.
முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஆனால் அவர் புறக்கணித்த போது, மூன்றாவது அணி எதிர்திசையில் இல்லை. அப்போது என்டிஏ கூட்டணி பெரிதாக இல்லை. பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறு.
திமுகவிற்கு எதிர்கட்சி அதிமுக தான் என நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அதிமுக இழந்திருக்கிறது. இந்த இடத்தை பாஜகவிற்கு அள்ளிக் கொடுத்துள்ளது. பாஜக கூட்டணி 'எதிர்கட்சி' என்ற சான்சை அதிமுகவே உருவாக்கி கொடுத்துள்ளது.
எடப்பாடி உத்தரவு; இப்படிப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாமகவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவது 2026ல் பாமகவின் சீட் பேரத்திற்கு வலுசேர்க்கும். அவர்கள் 2026ல் நம்முடன் வந்தால் அதிக சீட் கேட்பார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. பாமகவின் அரசியல் எழுச்சிக்கு அதிமுக உதவிடக்கூடாது.
திமுக எதிர்ப்பு வாக்குகள் எளிதாக பாமகவிற்கு சென்றுவிட கூடாது. மற்ற கட்சிகளுக்கு கூட போகலாம். பாஜக கூட்டணிக்கு செல்ல கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் பேசி உள்ளாராம். முன்னதாக அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாகவே எடப்பாடி இப்படி ஒரு கோரிக்கையை வைத்து உள்ளாராம்.
அதிமுக புறக்கணிப்பு; விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் . பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி உள்ளது அதிமுக.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications