சென்னையில் ஆட்டோவில் ஏறியது பெண் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் வேலையை காட்டிய டிரைவர்.. ட்விஸ்ட்
சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார். சாதாரண உடையில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆட்டோ வந்ததும் அதில் ஏறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் ஆப்பில் காட்டியதைவிட கூடுதலாக ரூ. 50 கேட்டு தகராறு செய்தாராம். அப்போது திடீரென சக்கரத்தை இயக்கியதால் இன்ஸ்பெக்டர் சுமதியின் காலில் காயம் ஏற்பட்டது.
சென்னை, கோவையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை புக்கிங் செய்தால், சில வாகன ஒட்டுநர்கள், ஆப்பில் காட்டுவதை கூட கூடுதலாக கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுவும் வாகனத்தில் ஏறிய உடன் கூடுதலாக 50 ரூபாய் கொடுங்கள் என்று கேட்பார்கள். சிலர் வாகனத்தை புக்கிங் செய்த உடனேயே 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் வருகிறேன் என்பார்கள்.

சிலர் இரவு நேரங்களில் ஆப்பில் காட்டுவதைவிட அதிகமாக கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதன் காரணமாக பயணிகள் வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில் சென்னையில் சாதாரண உடையில் இருந்து பெண் இன்ஸ்பெக்டருக்கு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அத்துடன் வாகனத்தை ஓட்டிய போது, இன்ஸ்பெக்டரின் காலில் ஏறி இறங்கி உள்ளது. அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை முகப்பேர் மேற்கு 6-வது பிரதான சாலையை சேர்ந்த சுமதி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாதாரண உடையில் கோயம்பேட்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக செல்போன் செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 37), இன்ஸ்பெக்டர் என தெரியாமல் அவரிடம், செயலியில் காட்டும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.50 தரும்படி கேட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன், சுமதியை ஆட்டோவில் இருந்து இறங்குமாறு கூறினாராம்.
இதனால் சுமதி ஆட்டோவில் இருந்து இறங்கிய போது, உடனே மணிகண்டன் ஆட்டோவை வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது ஆட்டோ சக்கரம் சுமதியின் காலில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சுமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற கோயம்பேடு போலீசார், ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்டோ சக்கரம் ஏறியதால் காலில் காயம் அடைந்த சுமதி, அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமதி சாதாரண உடையில் இருந்ததால் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் அவரிடம் கூடுதல் கட்டணம் கேட்டு டிரைவர் மணிகண்டன் தகராறு செய்த நிலையில், இப்போது போலீசிடம் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications