"செந்தாமரை" மாடத்திலே.. உதயநிதி பேசப்பேச, துர்காவுக்கு ஒரே பூரிப்பு.. "வணக்கம்" வைத்தது யார் பாருங்க
சென்னை: உதயநிதி சட்டப்பேரவையில் பேசப்பேச, அவரது குடும்பத்தினர் அதைக்கேட்டு பூரித்து போயுள்ளனர்.. இதுகுறித்த செய்திகளும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
திமுக அரசு இந்த முறை பொறுப்பேற்றதுமே, கலைவாணர் அரங்கில்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது.. ஆனால், அங்கு பார்வையாளர்கள் மாடம் இல்லாததால், சபையில் உதயநிதியின் பேச்சை அவரின் குடும்பத்தினர் நேரடியாக பார்க்க முடியவில்லை.
அதற்கு பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடந்தது.. உதயநிதியின் அன்றைய தின பேச்சை கேட்க, குடும்பத்தினர் திரண்டிருந்தனர்..

செந்தாமரை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில், உதயநிதி சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு அந்த துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதிலளித்து பேசினார். இதை மாடத்தில் உட்கார்ந்திருந்த துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, ஸ்டாலினின் மகள் செந்தாமரை உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் அனைவரும் ரசித்துக் கேட்டனர்.. அன்று சபைக்குள் உதயநிதி உள்ளே வந்ததுமே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எல்லாரும் அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
அவர் பேச ஆரம்பித்தபோதும், மேஜையை தட்டி உற்சாகம் தெரிவித்தனர். முதல்வரின் மனைவி துர்கா மாடத்திற்கு வந்ததும், திமுக எம்எல்ஏக்கள், அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.. உதயநிதியின் நண்பரும், அமைச்சருமான மகேஷ், தன்னுடைய சீட்டில் போய் உட்காராமல், உதயநிதி பேசி முடிக்கும்வரை, அவருக்கு பக்கத்திலேயே அன்று உட்கார்ந்திருந்தார்... "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப்பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்" என்று உதயநிதி தன் பேச்சை துவங்கினார்..
தோளோடு தோள்: "முத்தமிழறிஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்குப் பிறகு இன்று என்னுடைய நண்பனாக தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்... அதாவது தன்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே திமுகவின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என எல்லாரையும் குறிப்பிட்டு, தாத்தா, மாமா என்று அனைவரையும் உறவுமுறைசொல்லி, உரிமையுடன் குறிப்பிட்டு நன்றி சொன்னது திமுக-வினருக்கு ஆச்சர்யத்தை தந்தது..
உதயநிதி பேச பேச, அன்பில் மகேஷ் பூரிப்புடன் உதயநிதியை திரும்பி பார்த்து கொண்டேயிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் கைத்தறித்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மானிய கோரிக்கையில் முன்னதாக அமைச்சர் காந்தி தனது துறை மீதான அறிவிப்புகளை வெளியிட்டு பேசியிருந்தார். உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக சட்டப்பேரவை மாடத்திற்கு துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மயா, தங்கை கணவர் சபரீசன் ஆகியோர் வந்திருந்தனர்..

கன்னிப்பேச்சு: இவர்கள் அனைவரும் பேரவை மாடத்திற்கு வருகை தந்தபோது அமைச்சர்கள் செந்தில்பாலாஜி , பொன்முடி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், மாடத்தை நோக்கி வணக்கம் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தனர். உதயநிதி குடும்பத்தினர், மாடத்தில் இருந்து அவரது பேச்சை பார்த்து ரசித்தனர்... அப்போது உரையாற்றிய உதயநிதி தனது துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.. அத்துடன், ஐபிஎல் போட்டி தொடர்பாக எஸ்பி வேலுமணி பேச்சுக்கும் பதிலடி தந்தார்..
இந்த பேச்சுகளை எல்லாம் கேட்டு, உதயநிதியின் குடும்பத்தினர் ரசித்து கேட்டனர்.. அமைச்சர் உதயநிதி தன் உரையை முடித்ததும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்.. அத்துடன், தன்னுடைய மகள் தன்மயாவிற்கும் இன்று பிறந்தநாள் என்று உதயநிதி சொன்னார்.. உடனே பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு, தன்மயா 2 பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications