"பூனைக்குட்டி" வெளிவருது போல.. ஸ்டாலின் ரூமில் "கால்" வைத்த ஓபிஆர்.. ரெடியான எடப்பாடி.. அப்ப அதேதானா
ஓபிஎஸ் மகன் ஓபிஆர் திமுகவில் இணைவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஓபிஎஸ் மகன் ஓபிஆர், கட்சி மாற போகிறாரா? பாஜகவா? திமுகவா? என்ற கேள்விகள் கடந்த 2 நாட்களாகவே இணையத்தை துளைத்தெடுத்து வருகின்றன.. என்ன காரணம்?
ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோது, எடப்பாடி ஆதரவாளர்கள் பலரும் முன்வைத்த குற்றச்சாட்டு, ஓபிஎஸ் & ஓபிஆர் மீதுதான்.
திமுகவிடம் ஓபிஎஸ் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருவதுடன், சட்டசபையில் கருணாநிதியை அடிக்கடி பாராட்டி வந்ததும், எடப்பாடி தரப்பை கடுப்பாக்கி விட்டதாக சொன்னார்கள்..

நறுக் A
மேலும், ஓபிஎஸ் மகன் தனிமையில் சந்தித்து பாராட்டியதுடன், வாழ்த்து சொல்லி, பரிசும் தந்ததுதான், பெரும்பாலான அதிமுகவினரை டென்ஷனாக்கிவிட்டதாக தகவல்கள் வெடித்தன.. ஓபிஆர் ஸ்டாலினை சந்தித்ததை வைத்தே, எடப்பாடியின் ஒற்றை தலைமை அரசியலும் ஆரம்பமானது. இதற்கு ஓபிஎஸ் தரப்பிலும் அப்போது சில கேள்விகளை முன்வைத்தார்கள்..

நறுக் B
"ஒற்றை தலைமை பிரச்சனை வந்துவிட்டதாலேயே, முதல்வரை ரவீந்திரநாத் சந்தித்தாரா? அல்லது ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்ததால், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதா? ஒரு எம்பி முதல்வரை நேரில் சந்தித்தார் என்பதைதவிர, வேறு என்ன இதில் காரணம் உள்ளது? ரவீந்திரநாத் மட்டும்தான் முதல்வரை பாராட்டினாரா? ஏன் சட்டசபையில் செங்கோட்டையன் பாராட்டவில்லையா? செல்லூர் ராஜு பாராட்டவில்லையா? அவ்வளவு ஏன்? எடப்பாடியின் ஆதரவாளரான, ராஜேந்திரபாலாஜி பாராட்டவில்லையா? எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடியே, கருணாநிதியை பாராட்டவில்லையா? இவர்கள் மட்டும் தமிழக அரசையும், முதல்வரையும் புகழலாம்.. ஒரு எம்பி, தமிழக அரசை பாராட்டக்கூடாதா?

நறுக் C
அண்ணாமலை, திமுக ஊழல் பற்றி லிஸ்ட் வெளியிட்டு புட்டு புட்டு வைக்கிறாரே.. திமுக அரசின் சுகாதாரத்துறை மீதும், பத்திரப்பதிவு துறை மீதும் தானே அத்தனை புகார்களையும் அண்ணாமலை சொன்னார்? இதற்கு எடப்பாடி தரப்பில் வந்ததா? விஜயபாஸ்கர், கேசி வீரமணியாவது, வாயை திறந்தார்களா? கமுக்கமாக இருக்க என்ன காரணம்? நாங்கள் கேட்க நினைத்தால் எவ்வளவோ கேட்கலாம் என்று அடுக்கடுக்காக அடுக்கினார்கள்.. இதற்கு பிறகு ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுக்கவும், தலைவர்கள் 2 ஆக பிரிந்து விடவும், ஓபிஆர் + ஓபிஎஸ் + திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறைந்திருந்தது.

ஓபிஆர்
நீதிமன்ற நடவடிக்கைகளிலும், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.. இப்போது, மீண்டும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பழைய பாணி அரசியலை கையில் எடுத்துள்ளார்.. இந்த பேச்சை மறுபடியும் கிளறிவிட்டதே ஓபிஆர்தான்.. 1000 ரூபாய் மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்தை நேற்றைய தினம், மனம்திறந்து பாராட்டி உள்ளார்.. இதைதான் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கேள்வியாக கேட்கிறார்.. ரவீந்திரநாத் ஏற்கனவே திமுகவுடன் இருக்கும் நெருக்கத்தை வெளிக்காட்டியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

தந்திர அரசியல்
இந்நிலையில், ஓபிஆர் மற்றும் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடுகள் என்னவாக இருக்க போகிறது? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "எடப்பாடி கேள்வி கேட்பது போல, திமுகவை பற்றி இதுவரை ஓபிஎஸ், ஓபிஆர் ஓவராக விமர்சித்தது கிடையாதுதான்.. மென்மையான அரசியல் என்பதைவிட, தந்திரமான அரசியல் என்றே இதை சொல்லலாம்.

நிறம் மாறாத ஓபிஎஸ்
8 வழிச்சாலை திட்டத்துக்கு, அன்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது திமுக.. ஆனால், இப்போது அந்த திட்டத்தை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கவில்லை என்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.. இதற்குகூட ஓபிஎஸ்ஸும், ஓபிஆரும் வாய் திறக்கவில்லை.. போதைப்பொருள் நடமாட்டம் முதல் லாக்கப் டெத் வரை ஓபிஆர் எதற்குமே வாய் திறக்கவில்லையே.. அதிமுக விவகாரத்தில் சட்டரீதியான முடிவை எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் நம்பி இருந்தாலும், இதற்கான தீர்வு என்பது ஒருக்காலும் நீதிமன்றத்தில் கிடைக்காது.

ரத்தத்தின் ரத்தம்
கட்சி பிரச்சனையை, கட்சிக்குள்தான் பேசி முடிவெடுக்க வேண்டும்.. நீதிமன்றமே ஒரு தீர்ப்பு வழங்கினாலும், அதை நடைமுறைப்படுத்துவது கடினம்.. அதனால், யாரோ ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இன்னொருவருக்கு சிக்கல்.. இதனால் இலை முடங்க வாய்ப்புள்ளது.. அதேபோல, பெருத்த ஆதரவுடன் அரசியலில் பிரவேசிக்க ஓபிஎஸ்க்கு வாய்ப்பு இனி குறைவுதான்.. பாஜகவின் தயவு தேவைப்படும் அளவுக்கு திமுகவின் தயவு தேவை இல்லை என்றாலும், ஒருசில விஷயங்களுக்காக திமுகவை அனுசரித்து போக வேண்டிய நிலைமை ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது.

பிணக்கம் + இணக்கம்
அதற்காக திமுகவிலும் பகிரங்கமாக இணைந்துவிட முடியாது.. இரட்டை இலை, கொடி இல்லாமல் அதிமுகவையும் நடத்த முடியாது.. வேண்டுமானால், ஓபிஆருக்கு அந்த வாய்ப்பு அமையலாம்.. ஓபிஆர் மக்களவையில் பேசினால், அவர் பாஜக எம்பியா? அதிமுக எம்பியா? என்ற குழப்பம் அளவுக்கு பேசுவார்.. அந்த அளவுக்கு பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்.. அதனால், அதிமுகவில் தனக்கான எதிர்காலம் வெளிச்சமாக இல்லாதபட்சத்தில், பாஜகவிலும் அவர் இணையலாம்..

பிள்ளையார் சுழி
அப்படி ஓபிஆர் கட்சிக்குள் வந்தாலும் அவரை அரவணைக்க திமுகவும் தயாராகும்.. காரணம், தேனியை பல வருடங்களாகவே மீட்டெடுக்க முடியவில்லை.. தங்கத்தமிழ்செல்வன் இன்றுவரை அதற்காக முயன்று கொண்டிருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், இதெல்லாம் அரசியல் என்பதால், யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிலைப்பாடுகள் மாறலாம்.. அந்தவகையில், ஓபிஆர் நிறம் விரைவில் மாறக்கூடும்" என்றனர்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications