"ப்ச், கைவிட்டுட்டாங்க.. தப்பு பண்ணிட்டேனே.. ரீச் பண்ண முடியல".. நொந்து போய் "அவர்"கிட்ட சொன்ன ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளதாம்.. சட்டரீதியான நடவடிக்கைகளை கையில் எடுக்க போவதாக சொன்னாலும், கடுமையான அப்செட்டுக்கு ஆளாகி உள்ளாராம் ஓபிஎஸ்.
கடந்த பிப்ரவரி மாதம், பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருந்தது.
அத்துடன், அந்த பொதுக்குழுவின்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியானது..

தினகரன்
சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவானது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துவிட்டதாகவே அப்போதே பார்க்கப்பட்டது.. ஓபிஎஸ் தரப்புக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஓபிஎஸ் மட்டுமல்லாமல், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்குமே இந்த தீர்ப்பு மிகுந்த ஷாக்கை தந்திருந்தது.. ஏற்கனவே இடைத்தேர்தல் விவகாரத்தில், தங்களை பாஜக சரியாக நடத்தப்படவில்லை என்ற வருத்தத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என 3 தரப்புமே கடுமையான அதிருப்தியில் இருந்தபோது, பொதுக்குழு குறித்த எடப்பாடிக்கு சாதகமான உத்தரவானது, மேலும் அதிருப்தியை கூட்டியிருந்தது. இதையடுத்து, அன்றைய தினம் இரவே, சசிகலாவிடமும் தினகரனிடமும் போனில் பேசினாராம் ஓபிஎஸ்..

பழனிசாமி லாபி
அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன். பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவைத்தான் (ஓபிஎஸ்சுக்கு சாதகமானவை ) சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும்ன்னு சொன்னீங்க.. ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டாராம் சசிகலா. அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டுள்ளார். தினகரனிடம் பேசியபோதும் இதே ரீதியிலேயே ஓபிஎஸ் பேச்சு இருந்ததாம்..

ராஜதந்திரி
இந்நிலையில், இன்றைய தினம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.. இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு செம அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கும் மட்டுமல்ல சசிகலா, தினகரனுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது... ஒட்டுமொத்த கட்சியையும் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி தன் கையில் கொண்டு வந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வதென்று கையை பிசைந்து நிற்கிறாராம் ஓபிஎஸ்.. இதையடுத்து, 30 நிமிடங்களுக்கு முன்பு, ஓபிஎஸ்சை தொடர்புகொண்டு சசிகலா பேசியிருக்கிறார்.

பழனிசாமி
அப்போது, "தீர்ப்பு" பற்றி நொந்து போனவராக சொல்லியிருக்கிறார்... சசிகலா இதனை ஆமோதிக்கும் வகையில் பேசுவிட்டு, "நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பழனிச்சாமி எல்லா இடத்திலும் நல்ல லாபி வைத்திருக்கிறார். அதே மாதிரி நீங்களும் சோர்சை உருவாக்குங்கள். பாஜகவை நம்பாதீர்கள் என சொன்னேன். நீங்களும் கவனம் செலுத்துவதாகச் சொன்னீர்கள். ஆனா, கவனம் செலுத்தியமாதிரி தெரியலை. இப்படி கோட்டைவிட்டு விட்டீர்களே?" என்று கோபமாக வார்த்தைகளை வீசினாராம் சசிலகா.

சீரியஸ் சீரியஸ்
அதற்கு ஓபிஎஸ், "நீதிமன்ற விவகாரங்களை முன்னாள் ஆளுநர் ஒருவர் மூலமாகத்தான் அணுகுகிறார் எடப்பாடி. அவர்களை நம்மால் ரீச் பண்ணமுடியலைம்மா... பாஜகவின் முக்கிய சோர்ஸ்களிடம் நான் பேசும்போது, "கவலைப்படாதீங்க; பயப்படாதீங்க. உங்களை தலைமை கைவிட்டுவிடாது" என்றே எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். அதனாலேயே நீதித்துறை தரப்பில் சீரியஸ் காட்டாமல் இருந்து விட்டேன். பாஜக சோர்ஸை முழுமையாக நம்பியது என் தப்புதான்.. என்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள்" என்று சசிகலாவிடம் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிறராம் ஓபிஎஸ்.

மிஸ்டர் தம்பிதுரை
ஆக, டெல்லி தலைமையிடம் எடுத்து சொல்ல சரியான நபர் இப்போதைக்கு யாருமில்லை என்பதுதான் ஓபிஎஸ் டீமின் பிரதான பிரச்சனையாக இருந்து வருவதாக தெரிகிறது.. அதாவது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, ஆதரவாக நின்று, பிரதமர் மோடியிடம் சென்று பேசக்கூடிய அளவுக்கு தம்பிதுரை உதவினாரோ, அதுபோல் தங்கள் தரப்புக்கு யாரும் இல்லை என்பதே அந்த வருத்தமாக இருக்கிறதாம்.. அண்ணாமலையை மீறி சீனியர்கள் யாரும், ஓபிஎஸ் தரப்புக்கு உதவ முன்வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லியில் தமக்காக பேச, நம்பிக்கையானவர் ஒருவர் தேவை என்பதையிம் அழுத்தமாக தற்போது ஓபிஎஸ் உணர்ந்துள்ளதாக தெரிகிறது..
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications