"பெஸ்ட் பர்பார்மன்ஸ்".. மருதாணி வைத்து ராகுல் காந்தி விளையாடறாரே.. இதான் மெச்சூரிட்டியா? எகிறும் பாஜக
ராகுல்காந்திக்கு நாட்டை ஆளக்கூடிய முதிர்ச்சி பக்குவம் இல்லை என்கிறார் நிர்மல்குமார்
சென்னை: ராகுல்காந்திக்கு மெச்சூரிட்டியே கிடையாது, அதனால்தான் குழந்தைகளுக்கு மருதாணி வைத்து விளையாடி கொண்டிருக்கிறார் என்று தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக தமிழக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அவரிடம், ராகுல் காந்தியை பற்றி ஒரு ட்வீட் போட்டுவிட்டு ஏன் உடனே டெலிட் செய்துவிட்டீர்கள்? ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பாஜக தரப்பில் உரிய பதில் சொல்லப்பட்டுள்ளதா? அவருடைய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல்தான், அவருடைய டி-ஷர்ட் விலையை பற்றி விமர்சிக்கிறீர்களா? என்றெல்லாம் நாம் கேள்விகளை முன்வைத்தோம.

இமேஜ்
அதற்கு நிர்மல்குமார் நம்மிடம் அளித்த பதில்கள்தான் இவை: "ராகுல்காந்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.. ஒவ்வொரு யாத்திரைக்கும் ஒரு காரணம் இருக்கும்.. ஒவ்வொரு யாத்திரைக்கும் ஒரு கோரிக்கை இருக்கும்.. ஆனால் ராகுல் யாத்திரையில் அப்படி எதுவுமே இல்லை.. தன் மீது இமேஜ் வர வேண்டும் என்பதற்காக யாத்திரை மேற்கொள்கிறார்.. ராகுல்காந்தி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை காட்டிக்கொள்ளவே, பலநூறு கோடி செலவு செய்து, ஆயிரம் பேரை அழைத்து கொண்டு போகிறார்..

மெச்சூரிட்டி
இந்த யாத்திரைகளில் எதை பிரதானப்படுத்துகிறார்கள் என்றால், ராகுல்காந்தி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை போல, ஸ்டேஜ் பர்பார்மன்ஸ் காட்டிக் கொள்கிறார்கள்.. இதன்மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நேருவுக்கு பிறகு இந்தியாவில் குழந்தைகளை அதிகம் நேசிப்பவர் இவர்தான் என்று காட்டிக் கொள்கிறார்கள்.. இதை வைத்து நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால், இவரே ஒரு குழந்தை குணம் படைத்தவர்.. 20 வருடங்களாக அரசியலில் இருந்தாலும், எதையும் கற்றுக் கொள்ளவில்ல.. இவருக்கு முதிர்ச்சி பக்குவமும் இல்லை..

பிரியங்கா
2 வருடங்களுக்கு முன்பு, ஒரு குழந்தைக்கு மருதாணி வைத்து விளையாடி கொண்டிருந்தார்.. இவர்பின்னாடி எப்படி தொண்டர்கள் போகிறார்கள்? அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த ட்வீட்டை நான் போட்டிருந்தேன்.. இதை தவறாக திரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. பிடிஆர் முதல் வடஇந்தியா மீடியாக்களிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.. அதற்கு பிறகுதான் என்னுடைய விளக்கத்தை பதிவிட்டிருந்தேன்.. அந்த குழந்தை பிரியங்காவின் மகள் என்று தெரியும்.. அப்படி விளையாடியது தவறு என்றும் சொல்லவில்லை..

மருதாணி
ஆனால், எப்பவுமே இப்படி குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடி கொண்டிருப்பவரை நம்பி எப்படி இவர்கள் பின்னாடி போகிறார்கள் என்றுதான் கேட்டிருந்தேன்.. சாதாரணமாக கடந்து செல்ல வேண்டிய பதிவு இது.. ஆனால், இதை பூதாகரமாகிவிட்டார்கள்.. ஆங்கில விளக்கம் தந்தும், பலரால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.. என்னைவிட அந்த குழந்தையை கொச்சைப்படுத்துவது போல பதிவிட்டு விட்டார்கள்.. அதற்கு பிறகுதான் பதிவை நீக்கினேன்..

இளவரசர்
டி-ஷர்ட் போடுவது பிரச்சனை இல்லை.. 5 லட்சத்துக்கும் போட்டுக் கொள்ளலாம், 50 லட்சத்துக்கும் போட்டுக் கொள்ளலாம்.. டி-ஷர்ட் போடுவது அவரது உரிமை.. ராகுல்காந்தி, மிகப்பெரிய ராஜவம்சத்தை சேர்ந்தவர்.. ஆயிரக்கணக்கான கோடிகள் உள்ளது.. சின்ன வயதில் இருந்தே ஆடம்பரமாக வளர்ந்தவர்.. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு டி-ஷர்ட் போடக்கூடிய அளவுக்கு வசதியுள்ளவர்.. மிகப்பெரிய இளவரசர்.. பெரிய இடத்து பிள்ளை.. டி-ஷர்ட் போடக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே.. ஆனால், இந்த நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு அறிவு அவருக்கு போதவில்லை என்றுதான் சொல்கிறோம்..

ஹிந்தி
அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்லி வருகிறோம்.. வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது? வருடா வருடம் புதிதாக வேலை எத்தனை பேருக்கு உருவாக்கப்பட்டுள்ளது? கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் தாண்டி, அதிக அளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றெல்லாம் பலமுறை விளக்கம் சொல்லிவிட்டோம்.. அதுக்காக இவர் டைம் பாஸுக்கு கேட்கிற கேள்விக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது.. இந்தி தெரியாது போடா என்பதையெல்லாம் நாங்கள் பார்த்துட்டோம்.. இதெல்லாம் சும்மா ஷோ தான்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications