பாஜக ஆட்சிதான்.. ஆனால் மோடிக்கு "நோ".. ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் புது தலை.. யோகி, அமித் ஷா இல்லையா?
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடுமையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.

பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித்தது. ஆனால் இரண்டமாக கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக செய்த 15 பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
கோஷம் இல்லை; லோக்சபா தேர்தலில் கடந்த கட்ட தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர்பான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பியது. இடஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறையாண்மைக்கு எதிராக அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்றெல்லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது.
அதோடு பாஜக 400 இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் கணிப்புகள் வர தொடங்கின. இதன் காரணமாக தற்போது பாஜக 400 இலக்கு என்பதற்கான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது. அதோடு பாஜக தனியாக ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இல்லை. பாஜகவின் மெஜாரிட்டி 272ஐ தனியாக பெற வாய்ப்பே இல்லை என்று அந்த கட்சிக்கு சில ரிப்போர்டுகள் செல்கின்றன என்று கூறப்படுகிறதாம்.
என்டிஏ: அதாவது பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.. என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம். என்டிஏ ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடுமையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மோடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரகலாத் ஜோஷியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் நினைக்கிறதாம். பிரகலாத ஜோஷி கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.
இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் நிர்வாகி. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர். பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இவரை பிரதமராக்க வேண்டும்.. இல்லையென்றால் என்டிஏ கூட்டணியை உடைப்போம்.. என்று ஆர்எஸ்எஸ் வற்புறுத்த திட்டமிட்டுள்ளதாம்.
ஏன் மோடி வேண்டாம்: ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications