"கொடி பறக்குது".. நானும் அதிமுககாரன்தாண்டா.. ஓபிஎஸ் கெத்து.. உடனே வந்த எடப்பாடி: "நாகரீகமா நடக்கணும்"
சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நடந்து கொண்டிருக்கிறது.. மொத்த அதிமுகவும் எடப்பாடி கையில் வந்துள்ள நிலையிலும், ஓபிஎஸ் அசராமல் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி உள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது..

அதனால், சென்னை ஹைகோர்ட் மற்றும் டெல்லி ஹைகோர்ட்டில் உள்ள வழக்குகளை மேற்கோள் காட்டி, கொடி, சின்னம், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவார் என தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும்நிலையில், ஓபிஎஸ் தரப்போ, அடுத்தக்கட்ட சட்டபோராட்டத்துக்கு தயாராகி வருகிறது..
அதிரடி ஓபிஎஸ்: 24ம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு திருச்சியில் நடைபெற போவதால், அதற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறார்.. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போதே எச்சரிக்க துவங்கிவிட்டனர்.
அப்படி மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் தொடர்ந்து வார்னிங் தரப்பட்டு வருகிறது. ஆனாலும், திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி நிறைய பறக்க வேண்டும் என்று அதிரடியாக ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம்... அதன்படி, மாநாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா கட் அவுட்கள் வைக்கப்படும் என்று தெரிகிறது.. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே போஸ்டர் விளம்பரங்களில் பயம்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.
அதிமுக கொடி: அதுமட்டுமல்ல, அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும்கூட, எப்போதும் போலவே, "ஒருங்கிணைப்பாளர் " என்றே தன்னுடைய லெட்டர்பேடில் ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கையை வெளியிட்டு கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, தன்னுடைய காரில் இப்போதுவரை அதிமுக கொடியை அகற்றாமல் உள்ளாராம் ஓபிஎஸ்.. இந்த விவகாரம் குறித்து இன்றே பிரச்சனையை கிளப்பி, கேள்வி எழுப்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி..

செய்தியாளர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது, ஓபிஎஸ் இன்னும் அதிமுக கொடியை காரில் இருந்து அகற்றாமல் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எடப்பாடி, "நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தேர்தல் ஆணையத்தை மதித்து, நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். இதற்கு காரணம், நேற்றைய தினம் அதிமுகவின் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தந்திருந்த பேட்டிதான்.. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, பேரவையில், இனிமேல் அதிமுகவின் பெயரை சொல்லி ஓபிஎஸ் உட்கார முடியாது.. அதிமுகவின் கொறடா சொன்னால் மட்டும்தான் அமர முடியும்..
கெத்து காட்டும் ஓபிஎஸ்: அதேபோல ஓபிஎஸ் இனிமேல் அதிமுக கொடியை காரில்கூட கட்டக்கூடாது.. அப்படி இனிமேல் அவர் கொடியை பயன்படுத்தினால் நாங்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்வோம்.. நாளையில் இருந்து ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு வருவாரா என்று மட்டும் பாருங்கள்.. அப்படி கொடியை கட்டிக்கொண்டு வந்தால், சட்டம் தன் கடமையை செய்யும்" என்று கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டிதான் செய்தியாளர்கள் இன்று கேள்வி கேட்டார்கள்.. அதற்கு எடப்படி பழனிசாமி, நாகரீகத்தோடு ஓபிஎஸ் நடந்து கொள்ள வேண்டும் என்ற பதிலை தந்துள்ளார்... எனினும் இதற்கு ஓபிஎஸ் டீம் என்ன செய்ய போகிறது? ஓபிஎஸ் காரில் தொடர்ந்து கொடி பறக்குமா??
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications