"வீடியோ"வில் அப்பட்டம்.. எடப்பாடிக்கே ஷாக்.. கட்டுக்கட்டாக வேனில் ஏற்றினாரா ஓபிஎஸ்.. அப்போ அவ்ளோதானா

எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸின் நேற்றைய அதிரடியை எதிர்பார்க்கவே இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஏக குஷியில் உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு மீது கொள்ளை புகார் தரப்பட்டுள்ளது.. கட்டுக்கட்டாக ஓபிஎஸ் கொண்டு சென்ற டாக்குமெண்ட் என்ன? என்பதே அதிமுகவின் ஹாட் கேள்வி.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ் சென்றதுமே, இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவாளர் மீது எடப்பாடி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது... இதற்கு பிறகு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர்களை தாக்கினர்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.. அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தும், ஆக்ரோஷமாக கதவை உடைத்தும் உள்ளே நுழைந்தனர்... கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது... ஆனாலும், அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

 பிளான் என்ன?

பிளான் என்ன?

அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த கலவரத்துக்கு நடுவில், தலைமை அலுவலகத்துக்குள் சென்று முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி கொண்டுவிட்டதாக கூறப்பட்டது.. இதுதான் அதிமுகவுக்குள் புயலாக அடித்து கொண்டிருக்கிறது.. அது என்ன டாக்குமெண்ட்? ஓபிஎஸ் ஏன் திடீரென வந்தார்? சட்டசிக்கல்கள் வரும் என்று தெரிந்தும், அடாவடி செயல்பாடுகளில் ஏன் இறங்கினார்? என்ற கேள்விகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

 இடைஞ்சல்

இடைஞ்சல்

பொதுக்குழுவுக்கு எப்படியும், கோர்ட் அனுமதி தந்துவிடும் என்பது எடப்பாடி தரப்புக்கு முன்பேயே நம்பிக்கை இருந்துள்ளது.. அதனால்தான், பொதுக்குழு கூட்டத்தை எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் நடத்தி விட வேண்டும் என்று பக்கா பிளானில் இறங்கினார்கள்.. ஓபிஎஸ் தரப்பில், தொண்டர்கள் யாராவது பிரச்சனை செய்வார்கள், அதையும் சமாளித்து கொள்ளலாம் என்றுதான் எடப்பாடி டீம் அசால்ட்டாக இருந்துள்ளது.. ஆனால், அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ்ஸே நேரடியாக செல்வார் என்று எடப்பாடியே எதிர்பார்க்கவில்லையாம்.

டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

தன்னுடைய எதிர்ப்பை வலுவாக அந்த ஆபீசில் பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் ஓபிஎஸ் அங்கு கிளம்பி வந்ததாக சொல்கிறார்கள்.. கோர்ட்டில் 9 மணிக்கு தீர்ப்பு, எடப்பாடிக்கு சாதகமாக வந்தால், முக்கிய ஆவணங்களை எடுத்துவிட வேண்டும் என்பதும் முன்கூட்டியே யோசிக்கப்பட்டதாம்.. இந்த ஆவணங்களை வைத்துதான், தற்போது கோர்ட்டில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் நேற்றைய தினம், எடப்பாடி டீம் சரமாரியாக தாக்கியதை வீடியோ சம்பவத்தையும் ஆதாரமாக திரட்டி கொண்டிருக்கிறதாம் ஓபிஎஸ்.

 கிசுகிசுப்பு

கிசுகிசுப்பு

ஆனால், உண்மையை சொல்லப்போனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்தான் எடப்பாடி ஆதரவாளர்கள் அதிகம் பேரை தாக்கியதாக சொல்கிறார்கள்.. கல்வீச்சும், அடிதடியும் நடந்து, தொண்டர்களுக்கு மண்டை உடைந்துவிட்ட நிலையில்கூட, போலீசார் அங்கு உடனடியாக வரவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ்ஸுக்கு காவல்துறை சார்பில் லேசாக வழிவிட்டதாகவே இந்த சம்பவம் கிசுகிசுக்கப்பட்டது.. அதற்கு பிறகுதான் போலீசார் குவிக்கப்பட்டு, மொத்த பகுதியும் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.

வீடியோ

வீடியோ


ஓபிஎஸ் நேற்றைய தினம் நடந்து கொண்ட விதம், எடப்பாடிக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளதாம்.. தன் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் டீம் சரமாரி தாக்கும் வீடியோவை, இபிஎஸ் தயார் செய்து வருகிறாராம்.. அதுமட்டுமல்ல, நீதிமன்றம் அனுமதி தந்துவிட்ட நிலையில், எந்த அடிப்படையில் கட்சி ஆபிசுக்குள் ஓபிஎஸ் நுழைய முடியும்? வன்முறை சம்பவங்களுக்கு தூண்டுகோலாக இருக்க முடியும்? விதிகளுக்கு அப்பாற்பட்டே ஒவ்வொன்றையும் செய்திருப்பதாக கூறி, சட்டரீதியான ஆதாரங்களையும் திரட்டி கொண்டிருக்கிறதாம்..

 கட்டுக்கட்டாக

கட்டுக்கட்டாக

இப்படி இரு தரப்பிலுமே, ஆதாரங்களை திரட்டி கொண்டு கோர்ட்டுக்கு போக போகிறார்கள் என்றாலும், ஓபிஎஸ் கொண்டு சென்ற அந்த டாக்குமெண்ட் பற்றி தான் எடப்பாடி டீம் கொந்தளித்து போயுள்ளது. தான் வந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றியதே ஓபிஎஸ்தான் என்கிறார்கள்.. நேற்று நடந்த பிரச்சனைகளை விட்டுவிட்டு, இந்த ஆவணங்கள் குறித்துதான் எடப்பாடி டீமும் கலங்கி போயுள்ளது.. அதனால்தான், அதிமுக தலைமை அலுவலகத்தில் "கொள்ளை" அடித்ததாக ஓபிஎஸ் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ள அளவுக்கு சென்றுள்ளது என்றால், அந்த டாக்குமெண்ட்கள் என்ன? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+