சென்னை பீச்சில் பார்த்தால்.. சட்டென தோன்றிய உருவம்.. உற்று கவனித்தால்.. என்னங்க இது? குட்நியூஸ்!
சென்னை: சென்னையில் இருக்கும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன.

அதே சமயம் சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் ஈஞ்சம்பாக்கம் கடற்கரையும் ஒன்று.
இந்த நிலையில்தான் இன்று ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் அதிகாலையில் நடந்த சம்பவம் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் இன்று அதிகாலை எடுக்கப்பட்டு உள்ளது. அவரின் நண்பர் மூலம் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில்தான் அந்த உருவம் தெரிந்து உள்ளது. அந்த வீடியோவில் கடலுக்கு நடுவே ஒரு உருவம் ஜம்ப் செய்து செல்வது போல காட்சிகள் உள்ளன. கடலுக்கு நடுவே.. கப்பல்கள் எதுவும் இல்லாத அமைதியான நேரத்தில் அந்த உருவம் ஜம்ப் செய்து செல்கிறது. அது வேறு ஒன்றுமில்லை டால்பின்தான்! சென்னை கடற்கரை பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின் டால்பின் தென்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை ஈஞ்சம்பாக்கம் கடல் பகுதியில் அதிக அளவில் வெவ்வேறு இடங்களில் இதேபோல் டால்பின்கள் தோன்றி உள்ளன. இதை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. அதிக கப்பல் போக்குவரத்து, படகு போக்குவரத்து இருக்கும் இடங்களில் டால்பின்களை பார்ப்பது கடினம்.
அதேபோல் அதிக வெப்பம் உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்களை பார்ப்பது அரிது. சென்னையில் அவ்வப்போது டால்பின்கள் அரிதாக தோன்றுவது வழக்கம். இதற்கு முன் 2021ல் ஒரு முறை சென்னையில் பல்வேறு பீச்களில் டால்பின்கள் தோன்றின. அதேபோல்தான் இன்றும் ஈஞ்சம்பாக்கம் பீச்சில் டால்பின் தென்பட்டு உள்ளது.
டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்ப கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. கடல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அங்கு டால்பின்கள் தோன்றி உள்ளன.

அதேபோல் ஒரு கடல் பகுதியில் மீன்களின் வகைகள் சரியாக இருக்கிறதா, உயிரி சமநிலை சரியாக இருக்கிறதா என்பதையும் சுட்டிக்காட்டும் உயிரினமாக டால்பின்கள் உள்ளன. கடல் பகுதிகளில் டால்பின்கள் மிக மிக குறைவாக இருந்தால், அங்கே சமத்துவம் இல்லை. உயிரி சமநிலை இல்லை என்று அர்த்தம்.
அந்த வகையில் சென்னையில் டால்பின்கள் தென்பட்டு இருப்பது சுற்றுசூழல் ரீதியாக மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications