சென்னை பீச்சில் பார்த்தால்.. என்னது இது.. மீண்டும் மீண்டும் இப்படி நடக்குதே.. சட்டென தோன்றிய உருவம்!
நீலாங்கரையில் நடந்த இந்த சம்பவத்தை மக்கள் பலர் நேரில் பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.
சென்னை: சென்னையில் இருக்கும் நீலாங்கரை கடல்கரையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை சுற்றி சுற்றி பல்வேறு கடற்கரைகள் இருக்கின்றன. இதில் சில மெரினா, பெஸ்ஸி போன்ற கடற்கரைகள் அதிக மக்கள் செல்லும் இடங்களாக உள்ளன. இந்த கடல் பகுதிகள் அசுத்தமாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படும். இருந்தாலும் இந்த கடல் பகுதிகளை பாதுகாக்க, இங்கே இருக்கும் மீன் வளங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்த பேமஸான கடற்கரைகள் போக மற்ற சில கடற்கரைகளுக்கு மக்கள் அதிகமாக செல்ல மாட்டார்கள். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் செல்வார்கள். அதில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் போன்ற கடற்கரைகள் மக்கள் குறைவாக செல்லும் கடற்கரைகள் ஆகும்.

சென்னை
மாலை நேரங்களில் வாக்கிங் செல்ல சிலர் மட்டும் நீலாங்கரை செல்வது வழக்கம். அதேபோல் பிரபலங்கள் பலரின் வீடுகளும் நீலாங்கரை கடற்கரை பகுதியில்தான் அமைந்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் நேற்று நீலாங்கரை கடற்கரையில் நடந்த அதிசயமான சம்பவம் ஒன்று மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. அதன்படி கடலுக்கு நடுவே டால்பின்கள் தோன்றி உள்ளன. ஒன்று, இரண்டு என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் இங்கே வந்துள்ளன. கரைக்கு அருகே நீச்சல் போட்டுவிட்டு அதன்பின் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளன.

டால்பின்
சென்னை கடற்கரை பகுதியில் டால்பின்கள் கடந்த 6 மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் தோன்றி உள்ளன. சமீபத்தில் ஈச்சம்பாக்கம் கடற்கரையில் டால்பின்கள் தோன்றியது குறிப்பிடத்தக்கது. நேற்று நீலாங்கரையில் தோன்றிய டால்பின்களை மக்கள் பலர் ஆங்காங்கே பார்த்துள்ளனர். சென்னையில் பொதுவாக டால்பின்களை பார்ப்பது அரிது. டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீர் பகுதியை விரும்பக்கூடியவை. அந்த வகையில் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் டால்பின்கள் தென்படுவது ஒரு வகையில் நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

ஈஞ்சம்பாக்கம்
கடல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக அங்கு டால்பின்கள் தோன்றி உள்ளன. அதிக கப்பல் போக்குவரத்து, படகு போக்குவரத்து இருக்கும் இடங்களில் டால்பின்களை பார்ப்பது கடினம். அதேபோல் அதிக வெப்பம் உள்ள கடல் பகுதிகளிலும் டால்பின்களை பார்ப்பது அரிது. சென்னையில் அவ்வப்போது டால்பின்கள் அரிதாக தோன்றுவது வழக்கம். இதற்கு முன் 2021ல் ஒரு முறை சென்னையில் பல்வேறு பீச்களில் டால்பின்கள் தோன்றின.

நல்ல விஷயம்
அதேபோல்தான் இன்றும் ஈஞ்சம்பாக்கம் பீச்சில் டால்பின் தென்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு கடல் பகுதியில் மீன்களின் வகைகள் சரியாக இருக்கிறதா, உயிரி சமநிலை சரியாக இருக்கிறதா என்பதையும் சுட்டிக்காட்டும் உயிரினமாக டால்பின்கள் உள்ளன. கடல் பகுதிகளில் டால்பின்கள் மிக மிக குறைவாக இருந்தால், அங்கே சமத்துவம் இல்லை. உயிரி சமநிலை இல்லை என்று அர்த்தம்.அந்த வகையில் சென்னையில் டால்பின்கள் தென்பட்டு இருப்பது சுற்றுசூழல் ரீதியாக மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications