Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போச்சு.. இதுவும் நடக்காது போலயே.. ஃபிளைட் டிக்கெட் ரேட் உயர்வு.. வெளியானது ஷாக் அறிவிப்பு..!

உள்நாட்டு விமான டிக்கெட் விலை உயர்ந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடித்த சூரரை போற்று படத்தில் வருவதெல்லாம் இனி நமக்கு கனவுதான் போல.. விமான டிக்கெட் விலையை உயர்த்தி விட்டார்கள்.. இனி பர்ஸ் வெயிட்டா இருந்தால்தான் பறக்கவே முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

ஏழைகளாலும் விமானத்தில் செல்ல முடியும் என்ற கதை பின்னணியை கொண்டதுதான் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம்.. தேவையற்ற செலவுகளை நாம் குறைத்து கொண்டால், குறைவான கட்டணத்தில் ஏன் விமானத்தில் செல்ல முடியாது?

பெரிய வசதிகளோ, இலவச உணவுகளோ இல்லாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்துட்டே ஃபிளைட்டில் போயிடலாம் என்ற நம்பிக்கையை லேசாக ஏற்படுத்தியது அந்த படம். .. ஆனால், இன்னமும் கூட விமானப்பயணம் என்பது பலருக்கு கனவு தான் என்பதே யதார்த்தம்..

 அறிவிப்பு

அறிவிப்பு

நடக்கிறதை எல்லாம் பார்த்தால், நம்மால் எப்பவுமே பறக்க முடியாது என்றே தெரிகிறது... முன்பெல்லாம் சென்னை - மதுரை ஃபிளைட் டிக்கெட் குறைவாக இருந்தது.. இப்போது 4000 ஜி.எஸ்.டி, கூடுதல் வரி எல்லாம் சேர்த்து ரூ. 5000 வந்து விடுகிறது.. அதனால், எதுக்கு வம்பு என்று, விமான பயணத்தை தவிர்க்கும் நிலை வந்துள்ளது.. குறிப்பாக, ரயிலுக்கு பதில் விமானத்தை பயன்படுத்தியவர்கள் மறுபடியும் ரயிலுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

 வரம்பு

வரம்பு

போதாக்குறைக்கு, இப்போது கொரோனா டைம் என்பதால், டிக்கெட் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது.. விமான டிக்கெட் கட்டணத்துக்கான வரம்புகளை மத்திய அரசு உயர்த்திவிட்டது.. இதைத்தொடர்ந்து, விமான டிக்கெட் கட்டணங்கள் விரைவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 டிக்கெட்

டிக்கெட்

கடந்த வருடமே, கொரோனா நெருக்கடி காரணமாக மார்ச் மாதம் விமான போக்குவரத்துக்கு அரசு முழு தடை விதித்தது... அடுத்து, கடந்த மே மாதம் முதல் விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விமானப் பயண நேரத்தின் அடிப்படையில் வரம்புகளை நிர்ணயித்தது இந்திய அரசு... அதாவது, நெருக்கடியில் சிக்கியுள்ள விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக குறைந்தபட்ச வரம்பும், விமானப் பயணிகளுக்கு உதவுவதற்காக அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது.

விழுக்காடு

விழுக்காடு

இந்நிலையில், விமான டிக்கெட் கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பை 9.83 விழுக்காடு முதல் 12.82 விழுக்காடு வரை அரசு உயர்த்தியுள்ளது... இதற்கான உத்தரவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி, 40 நிமிடங்களுக்கு உட்பட்ட விமானப் பயணங்களுக்கு டிக்கெட் கட்டண குறைந்தபட்ச வரம்பு 11.53 விழுக்காடு (ரூ.2,600 முதல் 2,900) உயர்த்தப்பட்டுள்ளது...

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

40 நிமிஷங்களுக்கு உட்பட்ட விமானப் பயணங்களுக்கு கட்டண அதிகபட்ச வரம்பு 12.82 விழுக்காடு (ரூ.8,800 வரை) உயர்த்தப்பட்டுள்ளது... 60 முதல் 90 நிமிடங்களுக்கு உட்பட்ட விமானப் பயணங்களுக்கு குறைந்தபட்ச வரம்பு 12.5 விழுக்காடும், அதிகபட்ச வரம்பு 12.82 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணம் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

கொரோனா நாட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே, இந்திய விமான துறை அடி மேல் அடிவாங்கியது... முதல் அலையின்போதே பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகிறது.. எத்தனையோ பேருக்கு வேலையிழக்கும் சூழலும் ஏற்பட்டது.. அதனால், இழப்புகளை சமாளிக்கவும், விமான நிறுவனங்கள் தப்பிக்கவும் சில மாற்றங்களை கடந்த வருடம் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்திருந்தது... அதன் முதல்கட்டமாகவே இந்த இந்த உள்நாட்டு விமான பயணங்களுக்கான கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

சுருக்கமாக சொல்லப்போனால், 120, 150, 180, 210 நிமிட பயண கட்டணங்கள் அதிகபட்சமாக முறையே 12.3%, 12.42%,12.74%, 12.39%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது... மேற்கூறிய கட்டணங்கள் தவிர்த்து பாதுகாப்பு கட்டணம், விமானநிலைய பயனாளிகள் கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்றவையும் அடங்கும்... எனவேதான், உள்நாட்டு விமான பயணங்களில் பல மடங்கு கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+