EXCLUSIVE: சண்டை கூடாது.. அதிமுக தலைவர்கள் பற்றி விமர்சனம் பண்ணாதீங்க! அண்ணாமலை ஆர்டர்.. பரபர காரணம்
சென்னை: மாஜி அமைச்சர் சிவி சண்முகத்தின் பேச்சை தொடர்ந்து பாஜக - அதிமுக கூட்டணியில் பல்வேறு மோதல்கள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. இரண்டு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிய போவதாக கூட பேச்சுக்கள் எழுந்துள்ளன. நேற்று சமூக ஊடகங்களில் கூட பாஜக - அதிமுக தொண்டர்கள் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.
இந்த மோதல்களுக்கு எல்லாம் தொடக்க புள்ளி என்னவோ அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகத்தின் பேச்சுதான். திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரின் இந்த பேச்சு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

சண்டை மோதல்
அதாவது அதிமுக + பாஜக கூட்டணி முறிய போகிறது. காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க போகிறது. பாஜகவை கழற்றிவிட அதிமுக திட்டமிட்டுள்ளது. அதனால்தான் திமுக + பாஜக கூட்டணி வைக்க போவதாக சிவி சண்முகம் சொல்லி இருக்கிறார். சிவி சண்முகம் எடப்பாடி அனுமதி இன்றி இப்படி எல்லாம் சொல்ல மாட்டார். சிவி சண்முகத்தின் பேச்சை எடப்பாடி கண்டிக்கவில்லையே. கூட்டணி முறிவது உறுதியாகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்தன.

அண்ணாமலை விமர்சனம்
இந்த நிலையில்தான் சிவி சண்முகத்தை விமர்சனம் செய்து அண்ணாமலை கருத்து தெரிவித்தார். அதில், நான் இன்னும் சென்னை பாஜக ஆபிஸ் செல்லவில்லை. சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என்ன? நான் போய் பார்க்கவில்லை. பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் பாஜகவில் இருக்க வேண்டும். அவர் என்ன பாஜகவில் இருக்கிறாரா? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச அந்த கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். யாரோ 3ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பாஜகவின் கூட்டணி பற்றி பேசலாமா. அவர் பாஜகவின் கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் ஒன்று பாஜகவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சண்டை
இதையடுத்து சமூவலைத்தளங்களிலும் அதிமுக + பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. உங்க கூட்டணி எங்களுக்கு வேண்டாம்.. அதிமுக ஜெயிக்க பாஜகதான் காரணம் என்று பாஜகவினரும். பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் வெல்ல அதிமுகதான் காரணம். அதிமுக இல்லாமல் பாஜகவே இல்லை என்றும் இரண்டு கட்சியின் நிர்வாகிகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

எடப்பாடி என்ன சொன்னார்?
இந்த நிலையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி பாஜக குறித்து அவதூறாக பேச வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டணி பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதில் நாங்கள் நல்ல முடிவை எடுப்போம். இதை பற்றி நீங்கள் பேசவேண்டாம். பாஜக குறித்து அவதூறாக பேச வேண்டாம். பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. பாஜக நம்மை இதற்கு முன்பு கட்டுப்படுத்தியது இல்லை. இப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. நாடளுமன்ற தேர்தல்களில் நாம்தான் முடிவு எடுப்போம். என்ன கூட்டணி அமைய வேண்டும் என்று நாம் முடிவு எடுப்போம். நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி.

சமாதானம்
அதிமுக பாஜக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் எடப்பாடி பேசி இருந்தார். இந்த நிலையில்தான் அதிமுகவினர் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறாக பேச கூடாது. அதிமுக கூட்டணி குறித்து விமர்சனங்களை வைக்க கூடாது. சமுக வலைத்தளங்களில் அதிமுகவினருடன் சண்டை போட கூடாது என்று பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவு தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில ஐடி விங் தலைவர் சிடி நிர்மல் குமார், சமீபத்தில் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் பாஜக கூட்டணி பற்றி பேசியதில் இருந்துதான் இந்த மோதல் தொடங்கியது. அதன்பின் அவர்களின் எம்பி, எம்எல்ஏக்கள் பக்கம் இருந்து சிலர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது.

மோதல்
இதனால் சமூக வலைத்தளங்களிலும் இரண்டு கட்சி நிர்வாகிகள் மாறி மாறி மோதிக்கொண்டனர். ஆனால் இந்த மோதலுக்கு நேற்று எடப்பாடி முற்றுப்புள்ளி வைத்தார். பாஜகவினர் பற்றி அவதூறாக பேச கூடாது என்று கூறிவிட்டார். அவர் சைடில் இருந்து சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், எங்கள் சைடில் இருந்தும் எங்கள் நிர்வாகிகளுக்கு உத்தர விட்டுள்ளோம். சண்டை போட கூடாதுன்னு சொல்லி இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் அதிமுகவினருடன் மோத கூடாது என்று சொல்லி இருக்கிறோம்.

சண்டை கூடாது
பாஜகவில் தனி ஒரு நபரை குறிப்பிட்டு அண்ணாமலை இந்த உத்தரவை சொல்லவில்லை. எங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள எல்லோரையும்தான் குறிப்பிட்டு இருக்கிறார். எங்கள் கட்சியில் 60 சதவிகிதம் பேர் அதிமுகவினருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுவிட்டனர். அவர்களும் ரியாக்ட் செய்துவிட்டனர். இதனை தடுக்க வேண்டும் என்றுதான் இந்த உத்தரவை அண்ணாமலை போட்டுள்ளனர். இதை வைத்து சண்டை போட கூடாது என்று எண்ணத்தில் அண்ணாமலை இந்த உத்தரவை போட்டுள்ளார், என்று சிடி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications