இடியே விழுந்தாலும்.. சாலையில் இதை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க.. தவறவே கூடாத முக்கிய டிராபிக் ரூல்!
சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களுக்கு பல விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு விதியை மக்கள் பலரும் மறந்து விடுகின்றனர் அல்லது அதை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அபராதம் : அதன்படி நீங்கள் சாலையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். அப்போது போக்குவரத்து போலீசார் உங்களை நிற்க சொல்கிறார். நீங்கள் நிற்காமல் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அல்லது உங்களிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக அவர் உங்களை ஓரம்கட்ட சொல்கிறார். ஆனால் நீங்கள் பெரிய ஸ்டண்ட் மேன் என்று நினைத்துக்கொண்டு வாகனத்தை அப்படியே வளைத்து ஓடிட்டேன்ல என்று எஸ்கேப் ஆகும் வழக்கம் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் இது போன்று செய்யும் வழக்கம் கொண்டவராக இருந்தால்.. அதற்கே உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதாவது உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருந்தும் கூட போக்குவரத்து போலீசாரின் அறிவிப்புகளை ஏற்காமல் அல்லது அவர் சொல்வதை செய்யாமல் இருந்தால் அதற்கே உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இதற்கு தமிழ்நாடு போக்குவரத்து விதிப்படி 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
நீங்கள் போலீசிடம் நிற்காமல் சென்றால் கூட உங்கள் நம்பரை வைத்து போலீசார் இந்த அபராதத்தை விதிக்க முடியும்.
அதை பின்னர் நீங்கள் கோர்ட்டில் கட்ட வேண்டி இருக்கும்.
எனவே இனிமேல் சாலை ஓரத்தில் போலீஸ் நிறுத்தினால் முதலில் போலீஸ் சொல்வதை கேட்டு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆவணங்களை காட்டுங்கள். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் மட்டும் அதற்கு பைன் கட்டுங்கள்.

போக்குவரத்து விதி மீறல்: முன்னதாக சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்தது.
அதன்படி போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.
பெங்களூர் : பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும்.
மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் போட்டோ எடுத்து பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்றி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications