பதற்றமடைந்து மருத்துவனையில் குவிய வேண்டாம்... ரெம்டெசிவர் எல்லோருக்கும் தேவையில்லை - ராதாகிருஷ்ணன்
:கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் தினசரியும் 13 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது. 9,43,044 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமாக 95048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா சிகிச்சை மருந்து
பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை.

பரிசோதனை தேவை
தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர் உள்ளது. அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

படுக்கைகள் தயார்
தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் வசதி
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொது மக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

தனி மனித இடைவெளி
செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் தனி மனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து அவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications