Aarti: என் குழந்தைகளை பார்க்க விடவில்லை! கையை அறுத்துக் கொண்டேன்! ஆர்த்தி மீது ரவி மோகன் கண்ணீர்
சென்னை: என் குழந்தைகளை கண்ணால் கூட காட்ட முடியாது, பாடிகார்டுடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புறாங்க, குழந்தை பாசத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள் என நடிகர் ரவி மோகன் கண் கலங்கி பேசினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு குழந்தை பாசம் இல்லை என சொல்கிறார்கள். என் குழந்தைகள் மீது எனக்கு அதிக பாசம் இருக்கிறது. தினமும் என் இளைய மகன் செஸ் விளையாடிவிட்டுதான் தூங்குவான்.

என் பிள்ளைகளை பார்க்க விட மாட்டேங்கிறாங்க, பள்ளிகளுக்கு கூட பாடிகார்டுகளை அனுப்புகிறார்கள். போன் செய்து கூட குழந்தைகளுடன் பேச முடியவில்லை. ஒரே நாளில் என்னால் விவாகரத்து வாங்கியிருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதியாக இருந்தேன்.
எனது குடும்பத்தை கெடுக்க பலர் வேலை பார்த்தனர். குழந்தைகளை பார்க்க விடாததால் என் கையை நானே கிழித்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்று வாடகை வீட்டில் இருக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக என் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அந்த வீடு எப்படிப்பட்டது என அந்த ஈசிஆரே சொல்லும். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து கட்டிக் கொடுத்துவிட்டு தற்போது நான் வாடகை வீட்டில் நடிக்கிறேன். எனக்கு அதிக கடனாகிவிட்டது. அந்த வீட்டை விட்டு ஆர்த்தியை எனக்கு துரத்த தெரியாதா, என் மகன்களுக்காக அமைதியாக இருந்தேன். என் மகன்கள்தான் எனக்கு உலகம்! என ரவி மோகன் வேதனை தெரிவித்தார்.
நடிகர் ரவி மோகன் 2024-ல் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததிலிருந்து, அவருக்கும் கெனிஷாவுக்கும் காதல் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இருவரும் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஒன்றாகப் பங்கேற்று வந்தனர். அண்மையில் தரம்சாலாவில் நடந்த கோயில் விழாவில் அவர்கள் இணைந்திருந்தது பேசுபொருளானது. இதனால், ஆர்த்தி ஆதரவாளர்களிடமிருந்து கெனிஷாவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அந்தத் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஒரு மனிதரைக் காப்பாற்ற என்னையே நான் தியாகம் செய்தேன். ஆனால், இந்த உலகம் உண்மைக்கும் மென்மைக்கும் இடம் தராத ஒன்றாக இருக்கிறது. பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களுக்கே இங்கு இடம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "திரைத்துறையினருக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். அவர் இனி உங்கள் சொத்து. இனி எந்த விளக்கமும் இல்லை, அவருக்காகப் போரிடப் போவதும் இல்லை. அவரை முழுமையான விடுதலையுடன் வழியனுப்புகிறேன்," என ரவி மோகனுடனான உறவு முறிவை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக, கெனிஷா தனது இசைப் பயணம் மற்றும் தெரபி பணிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையை விட்டு வெளியேறுவதாகவும், "பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றது" என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் ரவி மோகன், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, கோவாவில் ஒரு வீட்டை வாங்கியது , இருவரும் சேர்ந்து ஒரு ஸ்டூடியோ திறந்தது என எல்லாமே விமர்சனங்களுக்குள்ளான நிலையில் தற்போது ரவி மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications