சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னதா ட்ரெஸ் போடாதீங்க.. அலிஷாவிடம் "அப்படி" சொன்னாரா திருச்சி சூர்யா? என்ன நடக்கிறது பாஜகவில்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில் அலிஷா அப்துல்லா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் சில புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெய்சி - திருச்சி சூர்யா வீடியோ சர்ச்சையான நிலையில் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சில நாட்களில் திருச்சி சூர்யாவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் இவரின் ராஜினாமாவை இன்னும் பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியில் இருந்து வெளியேறிய சூர்யா கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக வைத்து வருகிறார்.

ஐயப்ப மாலை போட்டிருக்கீங்க.. துபாய் ஹோட்டலில் நடந்த உண்மைய சொல்லுங்க! அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி ஐயப்ப மாலை போட்டிருக்கீங்க.. துபாய் ஹோட்டலில் நடந்த உண்மைய சொல்லுங்க! அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

சமீபத்தில் திருச்சி சூர்யா செய்த போஸ்டில், அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோரின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவார். இவர்கள் நான் இல்லாமல் இனி சந்தோசமாக இருப்பார் என்று திருச்சி சூர்யா, எல் முருகன், கேசவ விநாயகம் மீது புகார்களை அடுக்கி உள்ளார். அதோடு நீங்கள் உங்கள் விளையாட்டுகளை காயத்திரி (LM) மற்றும் டெய்சி (KV) ஆகியோருடன் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதாவது காயத்திரி பெயருக்கு பின் எல் முருகன் இனிஷியலையும், டெய்சி பெயருக்கு பின் கேசவ விநாயகம் இனிஷியலையும் போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா.

கட்சி விவகாரங்கள்

கட்சி விவகாரங்கள்

இப்படி கட்சி தொடர்பான விவகாரங்கள் பலவற்றை திருச்சி சூர்யா கூறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் மிகவும் அருவெறுப்பாக சூர்யா பேசி இருந்தார். அதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இருவரையும் பற்றி சில சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை திருச்சி சூர்யா வைத்தார். அலிஷாவை அமர் பிரசாத் மிரட்டுகிறார். அலிஷாவிடம் பணம் கேட்டு அமர் பிரசாத் மிரட்டுகிறார். இதில் சில வீடியோக்களை எடுத்து மிரட்டுவதாகவும் திருச்சி சூர்யா குறிப்பிட்டு இருந்தார். அலிஷா - சூர்யா இடையே பிரச்சனைகள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் பல வந்த நிலையில்தான் அலிஷா - அமர் பிரசாத் இடையே மோதல் இருப்பதாக சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.

பதிலடி

பதிலடி

இதற்கு பதில் அளித்த அலிஷா, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பா.ஜ.கவில் நான் இணைந்தேன். 10 நாட்களில் என்னை பார்க்க சூர்யா போன் செய்தார். நீங்க புதுசா கட்சியில் சேர்ந்து இருக்கீங்க. உங்களை வழி நடத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். அதனால் என்னிடம் பேசுவதாக கூறினார். அண்ணாமலை பெயரை சொல்லிக்கொண்டு என் அலுவலகமும் வந்தார். எதுக்கு வந்தீங்க என்று கேட்டதற்கு பெண்களுக்கு ஏற்ற பிரிவில் நீங்கள் இருக்க வேண்டும். விளையாட்டு பிரிவு உங்களுக்கு சரிப்பட்டு வராது என்றும் கூறினார். என்னிடம் பல தலைவர்கள் பற்றி தவறாக பேசினார்.

தவறாக பேச்சு

தவறாக பேச்சு

அதன்பின் நீங்கள் சிறிய ஆடை அணிய வேண்டாம். ஜிம்மிற்கு செல்லும் போது சின் உடை அணிந்து செல்லாதீர்கள். புடவை கட்டும் விதம் சரியாக இல்லை. கட்சியில் உங்களை பற்றித்தான் தவறாக பேசுவார்கள். உங்கள் வயிறு சரியில்லை என்று கூறியவர் பின்னர் என் உடல் உறுப்புகள் பற்றி கிண்டல் செய்தார். நான் இதை பற்றி அண்ணாமலையிடம் பேசியதற்கு... நான் அப்படி யாரையும் அனுப்ப வில்லையே என்று கூறினார். சூர்யா என்னை பாடி ஷெமிங் செய்தார். அதை பற்றி கட்சிக்குள் புகார் கொடுத்துள்ளேன் என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார். அவர் மோசமாக பேசியதற்கான வீடியோ என்னிடம் உள்ளது.

ஹனிடிராப்

ஹனிடிராப்

என்னிடம் தவறாக பேசியது, மற்ற தலைவர்களை பற்றி தவறாக பேசியதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. இதை ஹனி டிராப் என்று சொல்ல முடியாது. என் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில்தான் இந்த காட்சிகள் பதிவானது. அதைதான் தலைவரிடம் கொடுத்து உள்ளேன். அந்த வீடியோக்களை வெளியிட முடியாது. நான் அமர் பிரசாத் ரெட்டியுடன் லாங் டிரைவ் எல்லாம் செல்லவில்லை. அதெல்லாம் பொய். நான் அமர் பிரசாத் ரெட்டிக்கு பணம் கொடுத்ததும் இல்லை. இதெல்லாம் ஆதாரங்கள் இல்லாத பொய். தேவையின்றி கட்சியில் இருக்கும் பெண்ணை பற்றி சூர்யா பேசுகிறார். கட்சி தலைமையிடம் புகார் கொடுத்துள்ளேன். கட்சி ரீதியாக அவர் மீது விசாரணை நடத்தப்படும். கட்சி உட்கட்சி விவகாரம் என்பதால் நான் போலீசுக்கு போகாமல் கட்சி கமிட்டியிடம் புகார் கொடுத்து உள்ளேன், என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.

நீக்கம் இல்லை ஏன்?

நீக்கம் இல்லை ஏன்?

கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதல் பற்றி ஊடகங்களிலும் சூர்யா தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். ஆனாலும் இவரின் ராஜினாமாவை இன்னும் அண்ணாமலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்கு எதிராக லேசாக சில புகார்களை வைத்ததற்கே காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மத்திய இணை அமைச்சர், அமைப்பு பொதுச்செயலர்களுக்கு எதிராக பேசி இருக்கும் திருச்சி சூர்யாவின் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்றுகொள்ளாதது ஏன் கட்சி நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Don't wear a short dress, Did Trichy Surya body shame Alisha Abdullah? What happened?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X