சும்மா இருக்க மாட்டார் போலயே.. இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையே! டிரம்ப் எடுத்த அணு ஆயுத சபதம்!
சென்னை: இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது அணு ஆயுதங்கள் தொடர்பாகவும் முக்கியமான விஷயம் ஒன்றை பேசி உள்ளார்.
இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.

சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுத சபதம்
தற்போது ஈரானின் அணு ஆயுதம் குறித்தும் டிரம்ப் பேசி இருக்கிறார். அதில், ஈரான் அணு ஆயுதத்தில் கைவைக்கவே முடியாது. என்ன நடந்தாலும் அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்க முடியாது. ஈரான் அதை சாதிக்காமல் நான் பார்த்துக்கொள்வேன். இதை சபதமாக் எடுக்கிறேன்.. அமெரிக்காவின் விதிகளுக்கு அடிபணிந்து உடனே ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும், அணு ஆயுதம் தொடர்பான ஆலோசனைகளை, ஆராய்ச்சிகளை கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அமெரிக்காவின் விதிகளுக்கு அடிபணியவில்லை என்றால்.. அமெரிக்கா சார்பாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவோம். ஈரான் மீது அமெரிக்கா சார்பாக மிகப்பெரிய குண்டுகளை.. உலகமே பார்க்காத அளவிற்கு குண்டுகளை போட போகிறோம்.. எங்களின் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்.. என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
ஈரான் வைத்த செக்
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அது ஏற்றுக்கொள்ள ஒரே ஒரு நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த எச்சரிக்கையை ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயார். நாங்கள் ஆயுதங்களை கைவிடவும் தயார்.
ஆனால் மொத்த மத்திய கிழக்கு நாடுகளும் இதை செய்ய வேண்டும். மொத்த மத்திய கிழக்கு நாடுகள்.. அதாவது இஸ்ரேல் உட்பட எல்லோரும் ஆயுதங்களை கைவிட வேண்டும். இஸ்ரேல் அணு ஆயுதங்களை கைவிட்டால் நாங்களும் மொத்தமாக அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று ஈரான் கூறி உள்ளது.
ஈரான் அணு ஆயுதம்
சமீபத்தில் ஈரான் மீது ஐநாவின் அணு ஆயுத வாட்ச் டாக்.. அதாவது கண்காணிப்பு அமைப்பு விமர்சனம் வைத்து இருந்தது. அணு சக்தியை பயன்படுத்துவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை.. அவர்கள் அணுவை பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தது. இதன் காரணமாக கடுப்பான ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போகிறதாம். அதனால் சென்ட்ரிபுகல் அமைப்பில்தான் அணுவை செறிவூட்ட முடியும். அதாவது ஒரு சிலிண்டர் அமைப்புகளை குறிப்பிட்ட வாயுக்களை அனுப்ப வேண்டும். இதன் மூலம் அணுவை செறிவூட்ட முடியும். இப்படிப்பட்ட அணுவை செறிவூட்டினால் மட்டுமே.. அதை ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதைத்தான் ஆக்டிவேட் செய்ய போவதாக ஈரான் அறிவித்து உள்ளது.
ஈரான் அணு செறிவூட்டல்
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போவதாக அறிவித்து உள்ளது.
ஈரான் அணு உலை
ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
ஈரான் அணு ஆயுதம்: இதற்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.
ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.












Click it and Unblock the Notifications