கழுதை மேய்த்தால் ரூ.50 லட்சம்.. மத்திய அரசு தரும் மானியம்.. ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
சென்னை: என்னங்க சொல்றீங்க.. கழுதை வளர்த்தால் ரூ.50 லட்சம் கிடைக்குதா.. அதுவும் மத்திய அரசு அள்ளித்தருகிறதா... 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா... கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்று 90ஸ் கிட்ஸ்களை அப்பாக்கள் மற்றும் வாத்தியார்கள் திட்டியிருப்பார்கள். அவர்கள் வாய் முகூர்த்தத்தில் யாராவது கழுதைகளை மேய்த்து கொண்டிருந்தால், அதாவது பண்ணையாக வைத்து பராமரித்துக் கொண்டிருந்தால், இந்நேரம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அலுவலகங்களில் பல கழுதைகளை மேய்க்கிறேன் என்று கூறும் மேனேஜர்களை விடவும் சம்பாதிக்க முடியும் என்பது எதார்த்தமான உண்மை.
கழுதை வளர்த்தால் ரூ.50 லட்சம் என்பது எந்த அளவிற்கு உண்மை. எதற்காக 50 லட்சத்தை தூக்கி அரசு தர வேண்டும்.. அதற்கான பதிலை பார்ப்போம். இந்தியாவின் கழுதைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை குறைந்திருக்கிறது. எனவே கழுதைகளை அழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இந்தத் திட்டத்தில் கழுதைகளை இணைத்திருக்கறிது.

மத்திய அரசின் "தேசிய கால்நடை மிஷன்" திட்டத்தின் கீழ், கழுதைகள் வளர்ப்பை ஒரு தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ரூ.50 லட்சம் மானியம் கிடைக்குமா? என்றால்.. நிச்சயம் கிடைக்கும். கழுதை இனப்பெருக்க பண்ணை அமைக்க ஆகும் மொத்த செலவில் 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.50 லட்சம் என்று மத்திய அரசு வரையறை வைத்தள்ளது.
யாரெல்லாம் கழுதை பண்ணை வைக்க மானியம் பெறலாம் என்றால், யார் வேண்டுமானாலும் வைக்க முடியும். தனிநபர்கள், சுயஉதவி குழுக்கள் , விவசாய உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எல்லாம் சரி, ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா? அவ்வளவு வருமானம் வருகிறதா.. ஐடியில் வேலை செய்பவர்களே 2 லட்சம் சம்பாதிக்க முடியவில்லை.. எப்படி சாத்தியம் என்கிறீர்களா.. கழுதைப்பால் விற்பனையில் தான் இப்படி சம்பாதிக்க முடியும். சந்தையில் ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. இந்த கழுதைப்பால் அழகுசாதனப் பொருட்கள் , சோப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக இதற்கு மிகப்பெரிய தேவை உள்ளது.
ஒரு பண்ணையை முறையாக நிர்வகித்து, பாலை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்கிறார்கள்.
50 லட்சம் மானியம், 2 லட்சம் சம்பாத்தியம் கிடைக்குதே, நாளைக்கே ஆரம்பிக்கலாம்என்று நினைக்கிறீர்களா. அதற்கு நிபந்தனை வைத்துள்ளது மத்திய அரசு . கழுதை வளர்க்க விரும்புவோரின் பண்ணையில் குறைந்தது 50 பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகள் இருக்க வேண்டும். இதற்கு முதலில் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டும். அதன் பிறகே மானியத் தொகை விடுவிக்கப்படும்.
இந்த 50 லட்சம் மானியத் திட்டம் நாட்டு இனக் கழுதைகளை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த 50 லட்சம் மானியம் என்பது அரசு இலவசமாக வழங்கும் பணம் அல்ல; இது ஒரு தொழில் முனைவோர் திட்டம் ஆகும். அதாவது, நீங்கள் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், அரசு பாதியை ஏற்கும்.. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், ஓரளவு வட்டி இல்லாத கடன் போல் உங்களுக்கு கழுதை பண்ணை வைக்க அரசு உதவி செய்யும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications