சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV தொற்று.. அச்சப்பட வேண்டாம்.. பொது சுகாதாரத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வைரஸ் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை என்றும், தமிழகத்தில் பரவக்கூடிய HMPV வைரஸ் காய்ச்சல் வழக்கமாக பல ஆண்டுகளாக இருக்கும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவாகியுள்ள புது வைரஸ் நோயால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் எனப்படும் HMPV வைரஸ், சீனா மட்டுமின்றி தற்போது இந்தியாவிலும் கால் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் பெங்களூரில் 2 குழந்தை, குஜராத்தில் ஒரு குழந்தை என 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

hmpv virus tamil hmpv virus tamil nadu china hmpv

தமிழகத்தில் 2 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு குழந்தைகளுக்கு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வைரஸ் பரவல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும், தமிழகத்தில் பரவக்கூடிய HMPV வைரஸ் காய்ச்சல் வழக்கமாக பல ஆண்டுகளாக இருக்கும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும் தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:-

தொடர் கண்காணிப்பில் உள்ளனர்

HMPV வைரஸ் பாதிப்பு என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு வகை காய்ச்சல் தான். சளி, காய்ச்சல் என வழக்கமாக இருக்கக்கூடிய காய்ச்சல் தான் இது. யாரும் பயப்பட தேவையில்லை. சீனாவில் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.

இந்த வகை வைரஸ் பாதிப்பு பரவும் போது தான் நோயாளிகளிடம் இருந்து விரைந்து பரவும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் பாதிப்பு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஏற்கனவே இருக்கின்ற HMPV வைரஸ் பாதிப்பாகத்தான் தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. எனவே யாரும் பயப்பட தேவையில்லை. குறிப்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

தமிழகத்தில் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. தொடர்ந்து இருவரும் மருத்துமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+