"வாய் துடுக்கு".. நீங்க பாட்டுக்கு பேசலாமா? ஸ்டாலின் காதுக்கே போன தகவல்.. போனை போட்டு எச்சரிக்கை!
சென்னை: சமீபத்தில், வேலூர் தொகுதியில் வாக்கு சேகரித்த துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த், பெண்களை பார்த்து, நீங்கள் பளபளப்பாக மினுமினுப்பாக இருக்கிறீர்களே என்றார். தேர்தல் பிரச்சார களத்தில் இது பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் வேறு, தேர்தல் சமயத்தில் எதைபேசவேண்டும் . எதை பேசக்கூடாது என்று தெரியாமல், காமெடியாக பேசுகிறோம் என்கிற பாணியில் எதையாவது உளறி வைத்துவிடுகிறார்கள். அது நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அப்படிப்பட்ட விவகாரங்களையும் கவனிப்பதில் ஸ்டாலினுக்கு தாவு தீர்ந்து விடுகிறதாம்.
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
வேலூர் சம்பவம்: சமீபத்தில், வேலூர் தொகுதியில் வாக்கு சேகரித்த துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த், பெண்களை பார்த்து, நீங்கள் பளபளப்பாக மினுமினுப்பாக இருக்கிறீர்களே, எப்படி ? மகளிர் உரிமைத் தொகை மாசம் 1000 ரூபா கிடைக்கிறது தானே ? என்று கூறினார். அதை வைத்து ஃபேர் அண்ட் லவ்லி, பவுடர் வாங்குகிறீகள். அதனால் தான் பளபளன்னு இருக்கிறீர்கள் என்கிற ரீதியில் பேசினார்.
புகார் சென்றது: அவரது பேச்சு அவரை சுத்தி இருக்கிறவர்களை சிரிக்க வைத்தாலும், பெண்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தை துரைமுருகனுக்கு எதிரான வேலூர் உடன்பிறப்புகள் பலரும் அறிவாலயத்தில் புகாராக தெரிவித்திருக்கிறார்கள். வேட்பாளரே மூன்றாம் தர பேச்சாளர் மாதிரி பேசினால், நாங்களெல்லாம் பெண்களிடம் ஓட்டுக்கேட்டு எப்படி செல்ல முடியும்? என்று புகாரில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, துரைமுருகனை தொடர்புகொண்டு, ’’வேலூரில் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதும், கதிருக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது என எதிர்ப்புகள் அதிகம் வந்ததும் உங்களுக்கே தெரியும். இதையெல்லாம் மீறித்தான் உங்களுக்காக கதிருக்கு மீண்டும் சீட்டுக்கு ஓ.கே. பண்ணினேன்.
அவருடைய வெற்றியை தடுக்க ஏ.சி.சண்முகம் மெனக்கெட்டு வருகிறார். இதையெல்லாம் தெரிந்து, தொகுதியிலுள்ள அதிருப்திகளை போக்க வைத்து கதிருக்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
டியூசன்: ஆனா, இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாமல், அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காரே, இதெல்லாம் நல்லாவா இருக்கு அண்ணே ? எப்படி பிரச்சாரம் பண்ணனும்னு நீங்கள் சொல்லலையா? ஈசியா நாம் ஜெயிக்கிற இடத்தை கதிரின் வாய்த்துடுக்கால கெடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்க '’ என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
அதேசமயம், கதிர் ஆனந்தை ஃபோனில் பிடித்தும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதேபோல, துரைமுருகனும் கதிரை கண்டித்துள்ளார். இதனையடுத்து, ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது, எதை எதை பேசணும், எப்படி பேசணும்னு டியூசன் எடுக்கிறாராம் துரைமுருகன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications