அடுத்த ஒருவாரம் வெளியூர் பயணம் போகாதீங்க? எச்சரிக்கும் வானிலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்ட நிலையிலும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. கோடைக் காலத்தைப் போல உச்சிவெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பல மாநிலங்களில் மழை வெள்ளம் கட்டுக்கடங்காத காட்டாறு போல பாய்த்து வருகிறது. கேரளாவில் பெய்த மழையால் வயநாடு உள்ளிட்ட 3 ஊர்கள் காணாமல் போய்விட்டன. ஆனால், தமிழ்நாட்டில் பங்குனி மாசம் பல்லைக் காட்டிக் கொண்டு அடிக்கும் வெயிலைப் போல வெப்பநிலை கடுமையாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இப்படி ஒரு வெயிலை மக்கள் பார்த்ததே இல்லை. வரலாறு காணாத அளவு மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் அளவுக்கு வெயில் மண்டையைச் சுட்டெரித்து வருகிறது.

tamil nadu heatstroke

காலை வெயிலின் தாக்கம் இருந்துவரும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் புழுக்கம் அதிகம் நிலவுகிறது. வீடுகளில் ஏசி இல்லாமல் தூங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் கடும் வறட்சியான அனல் காற்று வீசி வருகிறது. காற்றே இல்லாமல் புழுக்கம் கூடுதலாக இருக்கிறது.

காலநிலை மாற்றம் என்பது மழையை மட்டும் அதிகம் கொடுப்பதில்லை. மாறாக மரண அடியைக் கொடுக்கும் அளவுக்கு வெப்பத்தையும் உமிழ்ந்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும்? தரை சூடு மறைந்து எப்போது குளிர்ச்சி நிலவும்?

இது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், "சாதாரணமாகவே செப்டம்பர் மாதம் வழக்கத்தைவிட வெயில் சற்று அதிகரிக்கும். அதற்குக் காரணம் என்னவென்றால்? தென்மேற்கு பருவ காலம் தொடங்குவதற்கு முன்பு கோடைக் காலம் நிலவும். அப்போது சூரியனின் குத்துக் கதிர்கள் தெற்கிலிருந்து வடக்கில் நோக்கி நகரும். அப்போது தமிழக நிலப்பரப்பைக் கடக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

அதன்பின்னர் சூரியனின் குத்துக் கதிர்கள் மீண்டும் கீழே வரவேண்டும். வடக்கிலிருந்து தெற்காக நகர்ந்து தெந்துருவப் பகுதிக்குப் போகும். இப்படி கீழ் நகரும் செயல் செப்டம்பர் மாதத்தில் தான் நடைபெறும். இப்படியான தருணத்தில் ஒரு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ அதே அளவு வெப்பநிலை 3 வாரங்கள் வரை நீடிக்கும்? குறிப்பாகச் சொன்னால் 10 நாட்கள் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.

இந்த வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டின் சில உட்புற பகுதிகளில் மழை பெய்யும். அதன் மூலம் மெல்ல வெப்பநிலை குறையும். இந்த வெப்ப நிலை முற்றிலும் குறைய வேண்டும் என்றால், அது வடகிழக்குப் பருவமழை துவங்கும்போதுதான் அது நடக்கும். அப்போது கடலிலிருந்து நமக்குக் காற்று வீசத் தொடங்கிவிடும். அதனால் 34 டிகிரி அளவில் வெப்பம் குறைந்து மிதமான சூழல் ஏற்பட்டுவிடும்.

தென்மேற்கு பருவமழை விடைபெற்றால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இது வழக்கமாகச் செப்டம்பர் 17க்குப் பின் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாகத் துவங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எப்படியும் 25 ஆம் தேதிக்கு பிறகே இது நடக்கும்" என்கிறார்.

சென்னையில் உள்ள தார்ச்சாலைகளில் பயணிக்க முடியாத அளவு வெப்பம் அதிகம் காணப்படுகிறது. பலர் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். காரணம், அதில் ஏசி வசதி உள்ளது. மேலும் இந்த வெப்பநிலை அதிகமாக வீசி வரும் நேரத்தில் நகர்ப்புற ரயில்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சென்னை பொது போக்குவரத்து பயணம் என்பது ஒரு கொடுமையான பயணமாக மக்களுக்கு மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+