Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மீண்டும் வருது டபுள் டக்கர் பேருந்துகள்! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! எந்த ரூட்டில் ஓடும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாலைகளில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் வலம் வர போகின்றன. 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு முழுவதுமாக டபுள் டக்கர் பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் 500 பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சென்னையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையை பொருத்தவரை ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து இருந்தாலும் பஸ்களே நகரின் அனைத்து இடங்களுக்கும் செல்வதால் பஸ்களில் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.

Chennai MTC

தாழ்தள பேருந்துகள்: சென்னை எம்டிசி ஆயிரக்கணக்கான பேருந்துகளை சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ஏசி பஸ், டீலக்ஸ் போன்ற பேருந்துகளையும் இயக்கி வருகிறது. விரைவில் தாழ்தள பேருந்துகளும் சென்னை நகரில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வாங்கப்பட்டு டெப்போக்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

18 ஏ வழித்தடத்தில்: இந்த நிலையில் தான் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. டபுள் டக்கர் பேருந்துகள் என்பது சென்னைக்கு புதிது அல்ல.. 1970 களில் சென்னையில் முதன் முறையாக இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 1980 களில் இந்த பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது.

பிறகு 1997 ஆம் ஆண்டில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட்டன. 18 ஏ வழித்தடத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் வரை 2008 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. ஆனால், வழித்தடத்தில் பாலங்கள் கட்டப்பட்டதாலும் மெட்ரோ பணிகள் போன்றவற்றாலும் இந்த பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது.

மீண்டும் டபுள் டக்கர் பேருந்து: இந்த நிலையில், மீண்டும் சென்னையில் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சாரத்தில் இயங்க கூடிய வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் சென்னை நகர கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் வாங்கப்பட உள்ளதாம்.

தனியாரிடம் ஒப்படைப்பு: இந்த பேருந்துகளை இயக்குவது மற்றும் பரமாரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கப்படும். எந்த வழித்தடத்தில் ஓட வேண்டும்.. கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பதை எம்டிசி நிர்ணயிக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு தொகை என நிர்ணையித்து பேருந்தை இயக்கும் தனியாருக்கு எம்டிசி கொடுத்து விடும் என்றும் டிக்கெட் வசூலை எம்.டி.சியே பெற்றுக்கொள்ளும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

960 கோடி ரூபாய்: டபுள் டக்கர் பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டத்தையும் அசோக் லைலாண்ட் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துள்ளது. சென்னையில் சுற்றுலா தலங்கள் இருக்கும் பகுதிகளில் இந்த டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிகிறது. விரைவில் 500 டபுள் டக்கர் பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட உள்ளதாகவும், 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் மகிழ்ச்சி: மும்பையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் முதல் ஏசி இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் பெங்களூரில் இந்த பேருந்துகள் அறிமுகம் செய்யப்ப்பட உள்ளன. தற்போது சென்னையிலும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் தகவல், பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+