ஒரே கல்லில் டபுள் மாங்காய்! திமுகவினரை குஷியில் ஆழ்த்திய 'ரீஃபண்ட்' பிளான்! இன்று முதல் விருப்ப மனு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.. அதன்படி இன்று முதல் அதாவது பிப்ரவரி 20-ம் தேதி முதல் திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவங்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிலையில், "மீண்டும் திமுக" என்ற ஒற்றை இலக்குடன் தேர்தல் பணிகளில் பாய்ந்து வருகிறது..

திமுக கூட்டணி
தமிழக அரசியலில் தற்போது நிலவும் கூட்டணி குழப்பங்கள், தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்புகள் என அனைத்தும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள சூழலில், திமுக தனது தேர்தல் வியூகத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது..
குறிப்பாக, மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள அக்கட்சி, அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளால் அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது..
தொகுதி பங்கீடு
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனையின் முடிவில், பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இப்படி ஒருபுறம் கூட்டணிக் கணக்குகள் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், திமுக சார்பில் போட்டியிடத் துடிக்கும் உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வேட்பாளர் விருப்பமனு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்..
இன்று வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2-ம் தேதி திங்கட்கிழமை வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், தற்போது வேட்பாளர் தேர்வுக்கான முதல் கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..
விருப்ப மனு இன்று முதல்
தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த முறை பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
அதேபோல் மகளிர் மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. விருப்பமனு படிவத்தைப் பெறுவதற்கு தனியாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது..
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், ஒருவேளை ஒரு உறுப்பினர் விண்ணப்பித்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டால், அவர் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் பின்னர் முறைப்படி திருப்பி அளிக்கப்படும் என்றும் துரைமுருகன் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்..
காசு திரும்ப வரும் - ரீபண்டு முறை
திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.. இதனைத் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் தொடர்ச்சியாகவே இந்த விருப்பமனு விநியோக அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. விருப்பமனு தாக்கல் செய்ய பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!











Click it and Unblock the Notifications