கோடி ரூபாய் லாபம் என்றாலும்.. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க.. பவர் பத்திரத்தில் 'டபுள்' சிக்கல்
சென்னை: பவரில் வரும் நிலத்தை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் பவர் கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க வேண்டும். பவர் பத்திரத்தின் நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள இடத்தில் உள்ளவரை நேரில் சந்தித்து உறுதி செய்ய வேண்டும். அவர் பவர்பத்திரத்தை ரத்து செய்திருந்தால், உங்களின் வாழ்நாள் உழைப்பு வீணாகிவிடும்.
பவர் பத்திரங்கள் என்பது ஒருவர் இன்னொருவருக்கு நிலத்தை பிரித்து விற்பனை செய்ய உரிமை வழங்கியிருப்பார்கள். அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் பிரமுகர் பவர் வாங்கி விற்பனை செய்வார். நிலத்தின் உரிமையாளருக்கு பதில் பவர் வாங்கியவர் கையெழுத்து போட்டு சொத்தை உங்கள் பெயரில் பதிவு செய்வார். சில நேரங்களில் நிலத்தின் உரிமையாளரே வேறு ஒரு நபருக்கு பவர் கொடுத்து சொத்தை விற்க கையெழுத்து போட்டு கொடுத்திருப்பார். அதை ஆவணமாக வைத்து உங்களுக்கு சொத்தை தருவார்கள்.

பவர் பத்திரம் டபுள் டாக்குமெண்ட்
அப்படிப்பட்ட நிலத்தை வாங்கும் போது, பவர் கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க வேண்டும். பவர் பத்திரத்தின் நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள இடத்தில் உள்ளவரை நேரில் சந்தித்து பத்திரம் செல்ல கூடியதா உறுதி செய்ய வேண்டும். அதேநேரம் பவர்பத்திரத்தை ரியல் எஸ்டேட் ஏஜெண்டும் விற்கலாம், ஓனரும் ( பவர் எழுதி கொடுத்தவர்)விற்கலாம் விற்றால் அது டபுள் டாக்குமெண்ட். அந்த டாக்குமெண்ட் பொதுவாக சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் இருவருமே தனித்தனியாக ஒருவருக்கு விற்றுவிட்டால், இரண்டு பேர் சொத்துக்கு உரிமையாளர் போல் ஆகிவிடும். அப்புறம் உங்கள் பணம் திரும்பவராது. அதேபோல் பவர் எழுதிக்கொடுத்தவர் பவரை ரத்து செய்திருப்பார். அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தின் ஆவணத்தை வைத்து உங்களிடம் பவர் வாங்கியவர் விற்றால் செல்லாது. எனவே இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
உயில் பத்திர நில டபுள் டாக்குமெண்ட்
உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில், எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம் ஆகும். பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கா என்று நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது டபுள் டாக்குமெண்ட் ஆகும். அப்படி நடந்திருந்தால் சிக்கல் வரலாம்.
செட்டில்மென்ட் பத்திர நிலம் டபுள் டாக்குமெண்ட்
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்க வேண்டும். 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட வேண்டாம். செட்டில்மெண்ட் பத்திரத்தை சிவில் கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது. ஈசி யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்கவே கூடாது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்.
உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்தின் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளை கவனமாக பார்க்க வேண்டும்.சட்டென இரண்டு பேருக்கு கை மாறியது போல் காட்டி, உங்களிடம் விற்று ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது.
அப்டேட் ஆகாத பட்டா மூலம் கிரயம்- டபுள் டாக்குமெண்ட்
1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை ரெவின்யூ ரெக்கார்டு எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது தற்போதைய உரிமையாளர்r என்பதை அப்டேட் செய்யாமல் இருந்தால் 1987முந்தைய ஓனர் & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால் அது டபுள் டாக்குமெண்டாகிவிடும். அந்த நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original ஓனர் இல்லை, அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் டபுள் டாக்குமெண்ட் ஆகும்.இந்த நிலங்களும் வில்லங்கத்தை தரலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவோர் சரியான வழக்கறிஞரை தேர்வு செய்து வில்லங்கம் உள்ளதா, நில ஆவணம் சரியா என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்ட போகிறீர்கள் என்றால், அவர்களே வீட்டின் வில்லங்கம் அனைத்தையும் பார்ப்பார்கள். அதை வாங்கும் முன்பு வங்கிகள் முழுமையாக ஆய்வு செய்யும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications