இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்.. கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்.. டிக்டாக்கில் மருத்துவர் அஸ்வின் விஜய்
Recommended Video
சென்னை: 4 வகையான உணவுகளை உணவில் உட்கொண்டால் கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என டாக்டர் அஸ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு இது வரை 170-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். கொரோனா வைரஸ் உலகில் உள்ள 19 நாடுகளில் பரவி வருகிறது.
ஏர் இந்திய விமானமும் சீனாவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா குடும்பத்தில் இது 7ஆவது வைரஸ் ஆகும்.

எதிர்ப்பு சக்தி
கொரோனா வைரஸ் நோய்க்கு உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதுகுறித்து டாக்டர் அஸ்வின் விஜய் டிக்டாக் வீடியோவில் கூறியிருக்கையில் வணக்கம் டிக்டாக் நண்பர்களே. இந்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போருக்கு மட்டுமே இது அதிகமாக வரும்.

இரு வேளை
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம். முதலில் இஞ்சி ஒரு விரல் அளவு இஞ்சியை எடுத்து அதை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அல்லது டீயில் போட்டோ குடிக்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு வேளைகள் குடிக்கலாம்.

பழ வகைகள்
இரண்டாவது பச்சைக் காய்கறிகள். அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை கீரை உள்ளிட்ட கீரை வகைகளை சாப்பிட்டால் மிகவும் நல்லது. மூன்றாவதாக பார்த்தால் வைட்டமின் சி இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். கொய்யாப்பழம், ஆரஞ்ச், நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிடலாம்.

மஞ்சள்
அடுத்து கடைசியான விஷயம் மஞ்சள். கிருமிநாசினியான மஞ்சளை தினந்தோறும் உணவில் சேர்த்து வர வேண்டும். ஒரு டீஸ்பூன் மஞ்சளை சாம்பார், ரசம் உள்ளிட்டவற்றில் சாப்பிடலாம். இதையெல்லாம் சாப்பிட்டால் நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். மிகவும் நல்லது. முக்கியமாக வைரஸ் பரவும் காலங்களில் இந்த உணவுகளை சாப்பிடலாம் என்றார்.












Click it and Unblock the Notifications