Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா நோயாளிக்கு ஃபெரிட்டின் அதிகரிக்க கூடாதுதான்.. ஆனா குறைக்க இயற்கை மருத்துவம் இருக்கே.. Dr தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா நோயாளிகள் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அதிகமாக பேரிச்சம் பழம் உள்ளிட்ட இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத்தின் தலைவர் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா தமிழ் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் , இன்று நாம் பார்க்கவுள்ளது எதை பற்றி என்றால் ஃபெரிட்டின் என்பது குறித்துதான். அப்படியென்றால் என்ன என நினைக்கிறீர்களா, அதன் பெயரிலேயே உள்ளது.

இரும்பு சத்து

இரும்பு சத்து

ஆம் ஃபெர்ரா என்ற இரும்பு என்பது பொருள். ஃபெரிட்டின் என்றால் இரும்புச் சத்தை சேமிக்கும் புரதம் என சொல்வார்கள். இது அனைத்து செல்களிலும் காணப்படுகிறது. நம் உடலில் இரும்பு சத்து எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ இந்த புரதம் விரிந்து நமக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது.

மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

அது மட்டுமல்லாமல் ஒரு செல்லில் ஆக்ஸிஜன் மெட்டபாலிசத்திற்கு இது மிகவும் முக்கியமானது. இந்த ஃபெரிட்டின் அளவு குறைந்தால் நம் உடலில் இரும்பு சத்தும் குறைந்து ரத்த சோகை (அனீமியா) ஏற்படும். இதே இந்த புரதத்தின் அளவு அதிகரித்தால் நம் உடலில் வைரஸோ அல்லது பாக்டீரியாவோ நம் உடலில் இருக்கிறது என்பது அர்த்தம்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

இந்த கொரோனா நேரத்தில் பொதுவாக செய்யும் மருத்துவ பரிசோதனைகளுடன் இந்த ஃபெரிட்டின் அளவை பார்க்கும் சோதனையும் முக்கியமானது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இதுகுறித்து பல ஆய்வுகளை நடத்தியுள்ளார்கள். இத்தாலியில் அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் இது ஆக்ட்டிவேட் மேக்ரோபேஜாக இது மாறுகிறது. அதாவது வெள்ளை அணுக்களுடைய எதிர்ப்பு சக்தியாக இது பார்க்கப்படுகிறது.

பாக்டீரியா

பாக்டீரியா

அப்படியென்றால் நம் உடலில் ஊடுருவிய பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போரிட்டு அழிக்கும். இந்த புரதம்தான் நம் உடலில் ஒரு தீவிரமான எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. நம் உடலில் முதல் தற்காப்பு அரணே இதுதான். உடலில் செப்டிக் ஷாக் ஏற்பட்டால் நம் உடலில் எதிர்ப்பு சக்தியாக இது செயலாற்றுவதற்கு அதன் அளவை அதிகரிக்கிறது.

பாக்டீரியா

பாக்டீரியா

ஆனால் வைரஸ் ,பாக்டீரியாவின் அளவு அதிகரித்தால் இதனுடைய அளவு குறையாமல் அதிகரிக்கிறது. உடலில் புகுந்துள்ள பாக்டீரியாவை அழிக்க இதன் அளவு அதிகரிக்கும். இது போல் ஃபெரிட்டின் அளவு அதிகரித்தால் நம் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் எந்த மாதிரி விஷயங்களை செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உணவு மாற்றங்கள்

உணவு மாற்றங்கள்

அது மட்டுமல்லாமல் ஃபெரிட்டீன் அளவு அதிகமாக இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு மாற்றங்களை செய்யலாம் என்பதையும் பார்ப்போம். இதன்மூலம் அவர்களின் உடலில் இருந்து வைரஸை வெளியேற்ற உதவுகிறது. தொற்றின் அளவையும் குறைக்கிறது. அவருக்கு நீரிழிவு நோய் , இதய நோய் உள்ளிட்டவை இருந்தால் அவர்கள் இயற்கை மருத்துவத்தின் மூலம் எளிமையாக கையாளலாம்.

மிளகு

மிளகு

மஞ்சளையும் மிளகையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் மிகப் பெரிய ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயலாற்றுகிறது. எதிர்ப்பு சக்திக்கும் பெரிய பலமாக உள்ளது. நமது உடலில் உள்ள மெட்டாபாலிசம் ஆரோக்கியமாக நடக்கவும் அதனுடைய ஆற்றல் சக்தியை அதிகமாக தயார் செய்வதற்கும் இது உதவுகிறது. முதியவர்களுக்கு தூக்கத்தை கொடுக்கவும் ஹார்மோன்களை பேலன்ஸ் செய்யவும் இந்த மஞ்சள் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஒரு டம்ளர் நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு தூள் , சிறிய இஞ்சி துண்டு, 5 கிராம் அதிமதுரம் , 10 இலை துளசி ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து குடித்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஃபெரிட்டினின் அளவையும் குறைக்கும்.

ஆண்கள், பெண்கள்

ஆண்கள், பெண்கள்

என்ன திடீர்னு ஃபெரிட்டின் குறித்து பேசுகிறீர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஃபெரிட்டின் என்பது ஒரு புரதம். நம் உடலில் இரும்பு சக்தி ஸ்டோரேஜ் வடிவில் இருப்பதுதான் ஃபெரிட்டின். எப்போது தேவையோ அப்போது மட்டுமே செயல்பட வைப்பது. பெண்களின் ரத்தத்தில் இந்த ஃபெரிட்டினின் அளவு 20 முதல் 500 நானோகிராம்/மில்லிலிட்டர், ஆண்களுக்கு 20 முதல் 200 நானோகிராம்/மில்லிலிட்டர் இருக்கும்.

மாமிசம்

மாமிசம்

இது அதிகரித்தால் கல்லீரலில் நோய் இருக்கு, தைராய்டு சுரப்பிக்கு இடையூறு ஏற்பட்டிருக்கு என்பதை உணர்த்துகிறது. இந்த ஃபெரிட்டின் அளவை குறைக்க நிச்சயம் மாமிசத்தை குறைக்க வேண்டும். ஒரு வேளை தெரியாமல் மாமிசத்தை சாப்பிட்டுவிட்டால் அதனுடன் விட்டமின் சி அல்லது பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அயர்ன் அப்ஷார்ப்ஷனை அதிகரிக்கிறது.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

மாமிசம் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, கேரட் சாப்பிடக் கூடாது. பெரிய மீன்களில் அதிகமான இரும்பு சத்து இருக்கிறது. அதிகமான பயிறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பயறு வகைகளிலும் , தானியங்களிலும் ஃபைடேட் (Phytates) இருப்பதால் அவற்றை சாப்பிடும்போது அதிகமாக இரும்பு சத்தை உறிஞ்சும் தன்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த ஃபைடேட் என்பது மைக்ரோ நியூட்ரீயன்ட்.

இரவில் ஊறவைத்த பருப்பு

இரவில் ஊறவைத்த பருப்பு

பாதாம் பருப்பை தினமும் இரவில் ஊறவைத்துவிட்டு காலை நேரத்தில் தோல் உரித்து சாப்பிட வேண்டும். வேர்க்கடலையையும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பசலை கீரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பசலை கீரையின் தனித்துவம் என்னவெனில் இரும்பு சத்து குறைந்தால் அதிகரிக்க உதவும். அதே ஃபெரிட்டினின் அளவு அதிகரித்தால் அதை குறைக்க இந்த பசலை கீரை உதவுகிறது. பசும் பால் அதிகமாக எடுக்கலாம்.

அலர்ஜி

அலர்ஜி

ஒரு பால் பொருட்களை சாப்பிட்டால் அலர்ஜி எனில் தினமும் சூரிய குளியல் போடுங்கள். இதன் மூலம் கால்சியம் அதிகரிக்கும். மேலும் அதிகமாக இருக்கும் ஃபெரிட்டின் அளவையும் ஒழுங்குப்படுத்தலாம். கிரீன் டீ குடிக்கலாம். இது ஆன்டி ஆக்ஸிடன்ஸ் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் அதிகமான இரும்பு சத்து உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. இந்த கிரீன் டீயில் அதிகமான இரும்புச் சத்து இருந்தாலும் ஃபெரிட்டினின் அளவை இது குறைக்கிறது.

வால்நட்

வால்நட்

பிளாக்ஸ் சீட்ஸ், வால்நட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் எடுத்துக் கொள்ளலாம். இரும்புக்கான சப்ளிமென்ட்ஸ்களை குறைக்க வேண்டும். ஆல்கஹால் எடுக்க வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் யோகாவும் மூச்சுப் பயிற்சியும் செய்வதன் மூலம் பாசிட்டிவ் திங்கிங் அதிகரிக்கும். ஃபெரிட்டின் லெவலையும் குறைக்கும். தண்ணீரை 3 முதல் மூன்றரை லிட்டர் குடிக்க வேண்டும்.

ஃபெரிட்டின்

ஃபெரிட்டின்

இந்த ஃபெரிட்டின் அளவு அதிகரித்தால் ரத்தத்தை உறைய வைத்து ஹார்ட் அட்டாக் மற்றும் மாரடைப்பு வரும் அபாயத்தை உண்டு செய்யும். கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டிற்கு சென்றாலும் இது போன்ற மாரடைப்பு உள்ளிட்டவை ஏற்படுத்துவதற்கு காரணம் இந்த ஃபெரிட்டின் அளவுதான். கொரோனாவால் இறந்தவர்களில் சிலருக்கு இந்த ஃபெரிட்டின் அளவு அதிகமாகியுள்ளது.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

பொதுவாக நிரீழிவு நோய் இருந்தால் ஃபெரிட்டினின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருக்கெல்லாம் ஃபெரிட்டின் அளவு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. யோகா நித்திரா என்ற யோகா பயிற்சியையும் செய்யலாம். கொரோனா நோயாளிகள் அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம் பழத்தை எடுக்காதீர்கள் என்றார் தீபா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+