சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நா வறட்சி, சுவையின்மையா?.. கவலையைவிடுங்க.. இந்த 3 பொருள் போதும்.. ஈஸியா விரட்டலாம்.. டாக்டர் கவுதமன்

Google Oneindia Tamil News

சென்னை: நாக்கு வறட்சி, சுவையின்மையை போக்குவதற்கு என்ன சாப்பிடலாம் என்பது குறித்து விளக்கியுள்ளார் டாக்டர் கவுதமன்.

Recommended Video

    நாக்கு வறட்சி, சுவையின்மையை போக்குவதற்கு என்ன சாப்பிடலாம் விளக்குகிறார் டாக்டர் கவுதமன் - வீடியோ

    இவர் சான்றளிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். Healing சிகிச்சையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்.

    இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் தலைமை மருத்துவ இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

     "மீன் வாங்க போறீங்களா".. தயவுசெய்து முதல்வர் சொல்றதை கேளுங்க.. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்!

    நாக்கில் ஏற்படும் புண்

    நாக்கில் ஏற்படும் புண்

    இதுகுறித்து டாக்ட ர் கவுதமன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், கொரோனா தொற்று கடுமையாக பரவி வருகிறது. இந்த தொற்று பாதித்தவர்கள் கூறும் ஒரு முக்கிய பிரச்சினை, நாவில் ஏற்படும் வறட்சி. இந்த பிரச்சினை மட்டுமல்லாமல் சுவையின்மையும் ஏற்படுகிறது. அடிக்கடி விக்கல் ஏற்படுதல், நாக்கில் ஏற்படும் புண்... இவையெல்லாம் வைரஸ் தொற்றுக்கு பிறகு மட்டுமல்ல, பொதுவாகவே ஏற்படுகிறது.

    பொருட்கள்

    பொருட்கள்

    நாவறட்சியை குறைக்க கூடிய கசாயத்தை பார்ப்போம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், உடல் உபாதைகளுக்காக மருந்து எடுத்து கொள்வோருக்கு கடுமையான நா வறட்சி இரவு நேரங்களில் ஏற்படும். இந்த நா வறட்சியை நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருள்களை வைத்தே எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    தேவையான பொருட்கள்

    நா வறட்சி கசாயம் செய்ய தேவையான பொருட்கள்:

    செருப்படை
    மிளகு
    திப்பிலி
    தேன்

    இந்த 4 பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த செருப்படை நம் வீட்டு தோட்டத்தில் இருக்கும். இல்லாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

    செருப்படை

    செருப்படை

    அடுப்பில் பாத்திரம் வைத்து 300 மி.லி தண்ணீரை ஊற்ற வேண்டும். செருப்படை என்பது தோல் நோயை நீக்கக் கூடிய மருந்து. தொடை இடுக்குகளில் பரவும் தோல் நோயை நீக்கக் கூடிய அருமருந்தாகும். மிகப் பெரிய விஷமருந்து முறிவாகவும் நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட செருப்படையின் சூரணம் 3 கிராம் அளவிற்கு நீரில் சேர்க்க வேண்டும்.

    கசப்பு

    கசப்பு

    பின்னர் மிளகு தூள். திப்பில் தூள் தலா 2 கிராம் சேர்க்க வேண்டும். கொதித்தவுடன் எடுத்து வடிகட்டி கொள்ளவும். இது கசப்பு மற்றும் காரச் சுவையுடன் இருக்கும் அதனால் இத்துடன் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் 3 கிராம் தேன் சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்களுக்கு இரவு நேரங்களில் நா வறட்சி ஏற்படும். இதனால் தூங்க முடியாமல் இருமலில் அவதிப்படுவார்கள் என்றார்.

    English summary
    Sri Varma Ayurvedic hospital Medical Director Dr K Gowthaman B.A.M.S says how to cure dryness and tasteless in tongue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X