ஜூன் 15 வரை கெடு! டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்க மூடுவோம்! கிருஷ்ணசாமி எச்சரிக்கை!
சென்னை: ஜூன் 15ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் தாங்களே மூடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை அரசு தடுக்காவிட்டால் தாங்கள் செய்து காட்டுவோம் என அவர் சவால் விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி இதனைக் கூறியிருக்கிறார்.
கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய கிருஷ்ணசாமி, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணசாமியும் மதுவிலக்கை வலியுறுத்தும் விதமாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மதுவால் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டிற்கு அவமானம் என அன்புமணி ராமதாஸ் அண்மையில் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதேபோல் மதுவில்லா தமிழகம் என்ற குறிக்கோளுக்காக பாமக, அதிமுக, உட்பட எந்த அரசியல் கட்சியுடனும் கை கோர்க்கத் தயார் என வேல்முருகன் அறிவித்துள்ளார்.
மொத்தத்தில் திமுக அரசுக்கு எதிராக மதுவிலக்கை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் ஓரணியில் திரளும் சூழலும் உருவாகியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications