30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்! விடைபெற்ற பசுமை புரட்சி நாயகன்
சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்பட அரசியல் தலைவர்கள், வேளாண் துறை சார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், நேற்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் ஆறுதலும் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்குப் பிறகு, தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மொத்தம் உள்ள 16 காவலர்களில் 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி முழு அரசு மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார் சுவாமிநாதன். சுவாமிநாதனின் தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராக வேண்டும் என்பது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. ஆனால், 1942ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சம் எம்.எஸ்.சுவாமிநாதனை மிகவும் கடுமையாக பாதித்தது. நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார்.
1960களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. உணவுப் பஞ்சத்தைப் போக்க அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், டபுள் மடங்கு லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதன்மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. இதனால் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications