சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் அரசின் சிக்ஸர் - முதல் நாள் ரூ.165கோடி; 2-வது நாள் ரூ.127 கோடி மது விற்பனை- ராமதாஸ் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமையன்று ரூ165 கோடிக்கும் செவ்வாய்க்கிழமையன்று ரூ127 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் சிக்சர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் 4 மாவட்டங்களில் 1937 - 38ஆம் ஆண்டில் மதுவிலக்கை நடைமுறைபடுத்தியவர் ராஜாஜி. 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்வதென கருணாநிதி முடிவு செய்ததை அறிந்த ராஜாஜி, 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார்.

Dr Ramadoss Statement on TASMAC Shops Sales

அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடினார். ஆனால் அதையும் மீறி தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு சாராயக் கடைகள் திறக்கப்பட்டன.

Tasmac:அரசின் 2000 ரூபாயை பறிக்க எத்தனை மனைவிகளின் மண்டைகள் கணவன்களால் உடைய போகிறதோ?.. ராமதாஸ் வேதனை Tasmac:அரசின் 2000 ரூபாயை பறிக்க எத்தனை மனைவிகளின் மண்டைகள் கணவன்களால் உடைய போகிறதோ?.. ராமதாஸ் வேதனை

இன்று நடப்பது! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் சூழலில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் நாள் மது விற்பனை ரூ.165 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை மதுவிற்பனை ரூ. 127 கோடியை தாண்டிவிட்டது. இது தான் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சிக்ஸர் ஆகும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has slammed that the opening of TASMAC Shops during lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X