சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர் ராமதாஸ்.. இத்தனை நாள் போட்ட டிவீட்டுகளிலேயே இன்று போட்டதுதான் நல்லா புரிஞ்சுது!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு-வீடியோ

    சென்னை: அப்பாடா... இன்றைக்குதான் டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள ட்வீட்களுக்கு ஓரளவு அர்த்தம் புரிய ஆரம்பித்து இருக்கிறது.
    தேர்தல் நெருங்கி கொண்டே இருக்கிறதே.. இன்னும் பாமக எதுவுமே சொல்லாமல் இப்படி அமைதியாக உள்ளதே என்று தமிழக மக்கள் யோசித்து கொண்டே இருந்தனர்.

    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரிடையே கூட்டணி அமைப்பதில் கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்பட்டு வந்தது.

    பொன்மொழிகள்

    பொன்மொழிகள்

    இன்னொரு பக்கம் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இவை எதற்குமே பதில் சொல்லாத ராமதாஸ் வெறுமனே வெளிநாட்டு பொன்மொழிகளை பதிவிட, மக்களோ தலைதெறித்து ஓட.. என ட்விட்டரே சுடசுட தகித்தது.

    2 ட்வீட்டுகள்

    2 ட்வீட்டுகள்

    இன்றைக்கு அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை என்ற முதல் படியை எடுத்து கூட்டணியும் அமைந்து விட்டது. அப்படி என்றால் இவ்வளவு நாள் ராமதாஸ் போட்ட ட்வீட் எல்லாம் அதிமுகவை மனதில் வைத்து கொண்டுதானா என்ற சந்தேகம் எழுந்தது. அத்துடன் இன்று திரும்பவும் 2 வெளிநாட்டு பொன்மொழியை பதிவிட, அந்த சந்தேகமும் உறுதியாகி விட்டது.

    கருத்தொற்றுமை

    இன்றைய பதிவில், "ஓர் உண்மையான தலைவர் என்பவர் கருத்தொற்றுமையை தேடிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக கருத்தொற்றுமையை வார்த்தெடுப்பவராக இருப்பார்! - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், அதிமுகவுடன் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் பரவாயில்லை, கருத்தொற்றுமையை வார்த்தெடுத்து, இரு தரப்பும் ஒத்து போவோம் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.

    சிறந்த தலைவர்

    அதேபோல இன்னொரு ட்வீட்டில், "எவர் ஒருவர் தமது இயக்கம் செல்ல வேண்டிய பாதையை அறிந்தவரோ, அந்த பாதையில் பயணம் செய்பவரோ, மற்றவர்களுக்கும் அப்பாதையை காட்டுபவரோ அவரே சிறந்த தலைவர் ஆவார்!-ஜான் சி. மாக்ஸ்வல்" என்று சொல்லி இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    அன்புமணி ஆசை

    அன்புமணி ஆசை

    இந்த ட்வீட்டை கண்டிப்பாக ராமதாஸ், மகன் அன்புமணிக்குதான் சொல்லி இருக்க வேண்டும். இயக்கம் செல்ல வேண்டிய பாதையை அன்புமணியைவிட நன்கு அறிந்தவர் ராமதாஸ்தான். அதனால்தான் திமுகவுக்கு செல்லவிருந்த அன்புமணியின் விருப்பத்தை நிராசையாக்கி அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளார் போலும்! எப்படியோ இந்த 2 ட்வீட்களால் ஓரளவுக்கு பிக்சர் கிளியர் ஆகி உள்ளது!!

    மொத்தத்தில் அனுபவம் பேசியுள்ளது.. அனுபவமே வெற்றியும் பெற்றுள்ளது.

    English summary
    PMK Founder Dr.Ramadoss has posted 2 tweets today. The people of Tamil Nadu now know what it means.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X