"ஓபனா சொல்கிறேன்" பழைய பாரதியை எடுத்து தூசு தட்டி.. டிவீட் போட்ட ராமதாஸ்.. வந்து குவியும் கமெண்டுகள்
ஆர்எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சினை ட்வீட் செய்துள்ளார் ராமதாஸ்
சென்னை: "திமுககாரன் கோயிலுக்கு போகாவிட்டால் அய்யருங்களுக்கே வருமானம் கிடையாது... இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க அயோக்கியனுங்க.. வட மாநிலங்களில் இருப்பவனுங்களுக்கு அறிவே கிடையாது. இதை நான் ஓபனாக சொல்கிறேன்'' என்று அன்று திமுகவின் ஆர்எஸ் பாரதி அன்று பேசிய சர்ச்சை பேச்சை மொத்தமாக கொண்டு வந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! இதற்கு ஆர்எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் என்று டைட்டில் கொடுத்துள்ளார்!!
ஆர்எஸ் பாரதி சர்ச்சைக்குரிய வகையில் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார்.. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் குவிந்தன... கமல் முதல் கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் உட்பட அவர் பேசியதை தவறுஎன்றுதான் சுட்டிக் காட்டினர்.
இது திமுக தலைவருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தது.. இதன்பிறகுதான் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்எஸ் பாரதி தன் பேச்சுக்கு வருத்தம் சொல்லி இருந்தார். ஆனாலும் பாஜக தரப்பு இதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

எஸ்வி சேகர்
நேற்றுகூட எஸ்வி சேகர் பிராமணர்கள் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "பேசுறதை எல்லாம் பேசிட்டு, வருத்தம் என்ன சொல்றது? மூக்குல குத்தினால் நாம திரும்ப குத்த வேணாமா" என்று பேசியிருந்தார். இதன்மூலம் பாஜகவினர் ஆர்எஸ் பாரதி மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் என்றே தெரிகிறது. எஸ்வி சேகரின் இந்த பரபரப்பு பேச்சு இப்போதும் வைரலாகி வரும்நிலையில், ஆர்எஸ் பாரதி பேசின பேச்சுக்களை தொகுத்து டாக்டர் ஐயா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக காரன்
"ஆர் எஸ் பாரதி உதிர்த்த முத்துகள் -2
1. ‘‘திமுககாரன் கோயிலுக்கு போகாவிட்டால் அய்யருங்களுக்கே வருமானம் கிடையாது. அய்யர் போனால் ரூ.5 கொடுப்பான், திமுக வட்ட செயலாளர் போனால் ரூ.100 போடுவான்,
கவுன்சிலர் ரூ.500 போடுவான். எம்.எல்.ஏ ரூ.1000 போடுவான். கேஎன் நேரு போன்றவர்கள் ரூ.5000 போடுவார்கள். ஆக நாம் போடும் துட்டில் தான் அய்யர்களே வாழ்கிறார்கள்!''
- ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்
2. ‘‘ இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான் டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க!'' - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்
|
அமைப்பு செயலாளர்
ஆர் எஸ் பாரதி உதிர்த்த முத்துகள்
1.‘‘மற்ற மாநிலங்களில் உள்ளவனெல்லாம் முட்டாள்கள். வட மாநிலங்களில் இருப்பவனுங்களுக்கு அறிவே கிடையாது. இதை நான் ஓபனாக சொல்கிறேன்'' - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்
2. ‘‘மத்திய பிரதேச ஐகோர்ட்டில் ஒரு அரிஜன் கூட நீதிபதி கிடையாது. இங்கு வரதராஜனை நீதிபதியாக கலைஞர் உட்கார வைத்தார். அதன்பின் 7,8 ஆதிதிராவிடர்கள் ஐகோர்ட் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் ஆதிதிராவிடர்களுக்கு போட்ட பிச்சை'' -ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்
3. ‘‘சுப்ரீம் கோர்ட் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடாரமாகி விட்டது. நான் ஒரு வக்கீலாக இருந்தாலும், இதை நான் சொல்லியாக வேண்டும்!'' - ஆர்.எஸ். பாரதி, திமுக அமைப்பு செயலாளர்
|
முத்துக்கள்
இந்த பேச்சுக்களை எதற்காக ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார், இதற்கான அவசியம் இப்போது என்ன என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு வார்த்தையும் விமர்சிக்கவோ, கருத்து சொல்லவோ இல்லை.. ஆர்எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சுக்களை "உதிர்த்த முத்துக்கள்" என்று ட்விட்டரில் பதிவிடவும், "டாக்டர் ஐயா உதிர்த்த முத்துக்கள்" என்று திமுகவுக்கு ஆதரவான குரூப்கள் களமிறங்கி "கோர்த்து" தந்து கொண்டுள்ளனர்!
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications