விந்தணு குறைப்பாட்டால் குழந்தையின்மையா?.. "இந்த" யோகாவை செய்தால் போதும்.. டாக்டர் ஒய்.தீபா விளக்கம்
சென்னை: குழந்தை பேற்றில் குறைபாடு இருக்கும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பேறு நிச்சயம் கிடைக்கும் என அந்த மருத்துவமனையின் கைநுட்பத் துறை நிபுணர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா கருவுறுதல் கர்ப்பப்பையிலோ அல்லது கருமுட்டையிலோ நடக்காது. இது எங்கு நடக்கிறது என்றால் ஃபெல்லோபியன் டியூபில் நடக்கும். அதாவது கருமுட்டைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் ஒரு குழாய் ஆகும். உடலுறவு முடிந்தவுடன் ஆணின் விந்தணுவானது கருமுட்டையை பார்ப்பதற்காக ஃபெல்லோபியன் டியூப் வழியாக வேகமாக வரும். முட்டையுடன் விந்தணுவும் சேரக் கூடியதுதான் சைகோட் (புதிதாக உருவான செல்).

இது சைகோட் (Zygote) ஆன பிறகுதான் அந்த செல்லானது கர்ப்பப்பைக்குள் உருண்டு போகும். கர்ப்பப்பையில் உள்ள லைனிங்கில் புதைந்து இன்பிளேண்டேஷன் ஆகி எம்ப்ரையோ ஆகி பிறகு கருவாகிறது. இதில் ஐவிஎஃப் என்றால் என்ன? கருத்தரித்த முட்டையை நேரடியாக கர்ப்பப்பையில் வைப்பது. கருவுறாமை என்றால் என்ன? குழந்தை பேறுக்காக முயற்சித்து வரும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் பைப்ராய்டு, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் கருத்தரிக்காமல் இருப்பதுதான்.
ஆண்களுக்கு என்ன பிரச்சினை இருக்கும் என்றால் அவர்களுடைய விந்துவில் விந்தணுக்கள் குறைவாக இருப்பது, டெஸ்ட்ரோஸ்டீரான் ஹார்மோன் குறைவு, விரைக்கொட்டையில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்படுதல், வயது முதிர்வாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படும். கருவுறாமை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஏற்படும், இருவரும் எதனால் கருவுறாமல் இருக்கிறார்கள் என்றால் வயது முதிர்வு(பெண்களுக்கு 35 வயதுக்கு மேல், ஆண்களுக்கு 40 வயதுக்கு மேல்), சர்க்கரை நோய், எந்த நேரத்திலும் சாப்பிடுவது, மது குடிப்பது, நிறைய உடற்பயிற்சி செய்வது, ரேடியேஷன் தெரபி கொடுக்கும் இடத்தில் பணியாற்றுவோர், அல்லது ரேடியேஷன் சிகிச்சை பெறுவோர், புகைப்பிடிப்பது, மன அழுத்தம், உடல் பருமன், கர்ப்பப்பையில் பிரச்சினை, உள்ளிட்டவையால் கருவுறாதது நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
இது போன்ற ஆண், பெண் கருவுறாதன்மையை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தினால் சரி செய்யலாம். இந்தியாவில் 20 சதவீதம் பேருக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது. அதில் ஆண்களுக்கு விந்தணு குறைபாட்டால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். அதாவது ஒரு ஆய்வில் 20 ஆண்களில் ஒருவருக்கு விந்தணு குறைவாக இருப்பதை பார்த்துள்ளோம். 100 ஆண்களில் ஒரு ஆணுக்கு சுத்தமாக விந்தணுவே இல்லாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் உடல் உழைப்பில்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, மனஅழுத்தம் ஆகியவை காரணமாகும்.
விந்தணுக்களை டிரான்ஸ்போர்ட் செய்யும் பணியை டெஸ்ட்ரோஸ்டீரோன், ஆன்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்கள்தான் கன்ட்ரோல் செய்யும். இந்த ஹார்மோன் குறைவாக இருந்தால் விந்தணுக்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும். அதன் வடிவம் மாறியிருக்கும். இல்லாவிட்டால் நகர்ந்து செல்லும் தன்மை இல்லாமல் இருக்கலாம். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தம்பதிகளாகவே வந்து சிகிச்சை பெற்று பலனடைகிறார்கள். இங்கு இவர்களுக்கு பிரைடல் யோகா, கபிள் யோகா கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நிறைய தம்பதி பயனடைந்துள்ளார்கள். உதாரணமாக அண்மையில் ஒரு நோயாளி வந்தார். அவருக்கு விந்தணு எண்ணிக்கை என்பது 4.5 மில்லியன்தான் இருந்தது. மொர்ட்டிலிட்டி எனப்படும் விந்தணு நகரும் தன்மை 0வாக இருந்தது.
பெண் கருத்தரிக்க ஆணின் விந்தணுவானது 14 - 15 மில்லியன் இருக்க வேண்டும். ஆணுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கவும் இவருடைய மனைவிக்கு பிசிஓடி பிரச்சினைக்காகவும் சிகிச்சை அளித்தோம். இந்த சிகிச்சைக்கு பிறகு 3 மாதங்கள் கழித்து அந்த பெண் கருவுற்றார். கருவுறாமைக்கு யோகா பயிற்சி என்ன செய்யும்? ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது அதிகரித்தால் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். மூச்சுப் பயிற்சியில் பிரணாயாமம் கொடுத்தால் மன உளைச்சலை குறைக்கும். மலட்டுத்தன்மை இருக்கும் ஆண்களில் 70 சதவீதம் பேருக்கு மன உளைச்சலால் விந்தணுக்கள் குறைவாக இருக்கிறது. கிரியா யோகா, தியானம் உள்ளிட்டவைகளால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும், அது நகரும் தன்மையையும் அதிகரிக்கும். யோகா செய்தால் தாம்பத்ய ஈடுபாடு குறைவாக இருக்கும் என நிறைய பேர் சொல்வார்கள். அது தவறான விஷயமாகும். யோகாவால் ஆண்களுக்கு தாம்பத்ய உறவை தூண்டிவிடுகிறது. இதனால் பெண்களுக்கு கருத்தரிப்பு எளிதாக நடக்கிறது.
பத்ரிகா எனும் பிரணாயாமம் மிகவும் உதவியாக இருக்கும். இதை 30 நிமிடங்கள் செய்தால் நமக்கு நல்ல சுவாசத்தை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். சேதுபந்தாசனத்தை தினசரி செய்வதால் இடுப்பு எலும்பு மற்றும் தசையை வலுப்படுத்துகிறது. இதனாலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. தனுராசனத்தை செய்யும் போது வயிற்று பகுதியில் நல்லதொரு மசாஜை கொடுக்கும். அஸ்வினிமுத்ராவும் விந்தணுக்களை மேம்படுத்தும். இதை நாம் தொடர்ந்து செய்தால் பிறப்புறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. நாடி சோதன பிரணாயாமம்-நாடியை சுத்தப்படுத்த இது உதவுகிறது. பிறப்புகளுக்கான ரத்தவோட்டத்தையும் ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கும்.
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்? பசலை கீரையில் போலிக் ஆசிட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் இருக்கிறது. விந்தணுக்கள் கர்ப்பப்பையை அடைவதற்கு தேவையான வலிமையை இந்த கீரை கொடுக்கும். செவ்வாழையில் இரும்பு சத்து, விட்டமின் ஏ, பி1, சி ஆகியவை இருக்கும். செவ்வாழை விந்தணுக்களை வலுப்படுத்துகிறது. புரோமிலின் எனும் என்சைமை அதிகரிக்க உதவுகிறது. இந்த என்சைம்கள் நம் உடலில் எந்தவித அழற்சியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. வால்நட், பூசணி விதை (மஞ்சள் பூசணி விதை மிகவும் நல்லது), ஜிங்க் சத்து கிடைக்கும் பார்லி, பீன்ஸ் வகைகள்,கீரைகள், வேகவைத்த முட்டை ஆகிய உணவுகளை எடுப்பதால் விந்தணுக்கள் பலம் பெறும், நகரும் தன்மையை பெறும். ஆஸ்பர் அகஸ் (தண்ணீர்விட்டான் கொடி) எனும் கீரையில் விட்டமின் சி இருக்கிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. கசப்பு சுவை அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். அமுக்குரா கிழங்கின் வேரை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பலன் தரும். இவ்வாறு டாக்டர் ஒய் தீபா தெரிவித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications