நிறைய தண்ணீர் குடியுங்கள்.. கருப்பு பூஞ்சையும் காணாமல் போகும்.. டாக்டர் ஒய் தீபா அட்வைஸ்!
சென்னை: நிறைய தண்ணீர் குடித்தால் கருப்பு பூஞ்சை காணாமல் போகும் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு ஒய் தீபா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில் கொரோனாவுக்கு பிறகு அதிகம் பேசப்படுவது மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை.
இந்த கருப்பு பூஞ்சை குறித்து நாம் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. கருப்பு, வெள்ளை, மஞ்சள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறங்களை சொல்லி வருகிறார்கள். வீடுகளில் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாத உணவு பொருட்களில் பூஞ்சை இருக்கும்.

பாதிப்பு
இந்த பூஞ்சைகள் முகம், மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட காரணம் என்னவெனில் கொரோனா தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரிலோ , ஆக்ஸிஜன் உதவியுடனோ பல நாட்கள் மருத்துவமனையில் இருப்பதால் வரக் கூடியதுதான் இந்த கருப்பு பூஞ்சை. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் நாம் இருக்கும் போது ஸ்டீராய்டு மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பார்கள்.

மருந்துகள்
பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகளை நாம் எடுக்கும் போது நம் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது எதிர்ப்பு சக்தியை குறைக்கக் கூடிய தன்மை இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமில்லை, நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இந்த கருப்பு பூஞ்சை வரும்.

வைத்தியம்
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இதற்கு வைத்தியம் இருக்கிறது. இந்த கருப்பு பூஞ்சையிலிருந்து நாம் எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி நாம் வீட்டுக்கு வந்தவுடன் தைரியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடுத்ததாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

புத்துயிர்
உடலில் தண்ணீரின் அளவு அதிகரித்தாலே செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியின் அளவும் அதிகரிக்கும். உப்புத் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும். நோயாளிகள் இரு நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் குளிக்க வேண்டும். உடல் சுத்தமாக இருத்தல் வேண்டும். இது வெளிபகுதியை சுத்தமாக வைத்திருக்கும்.

சுத்தம்
தண்ணீரை குடித்தால் உள்ளுறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதற்கு நமது யோகா மருத்துவத்தில் ஜலநிதி என சொல்லக் கூடிய ஒரு பயிற்சி உண்டு. இது நமது மூக்கின் பகுதிகளை சுத்தப்படுத்துவது இல்லாமல் வைரஸின் லோடையும் குறைக்க இது உதவும். இதில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்
அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் கல் உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை யோகா மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது அவசியம். நின்றுக் கொண்டு ஒரு மூக்கின் துவாரம் வழியாக தண்ணீர் விட்டால் வாயை திறந்து கொண்டு மறுமூக்கு துவாரம் வழியே வெளியே வர வேண்டும். அப்போது வைரஸ், தூசு பொருட்கள் எல்லாத்தையும் சுத்தம் செய்யும். அவையும் வெளியே வந்துவிடும். இந்த உப்பில் உள்ள சோடியம் குளோரைடானது செல்களில் ரியாக்ட் ஆகும் போது ஹைப்போ குளோரஸ் ஆசிடாக மாறும். இந்த ஹைப்போ குளோரஸ் என்னவெனில் பல கிருமிநாசினிகளில் இருக்கக் கூடிய பொருள் நம் உடலில் இயற்கையாக உருவாகிறது.

பேலன்ஸ்
இதன் பிறகு நாடி சுத்தி பிராணயாமம் குறித்து சொல்கிறேன். நாடிகளை சுத்திகரிப்பதுதான் இதன் நோக்கம். இட நாடி, பிங்கல நாடியை பேலன்ஸ் செய்தோமேயானால் ஆக்ஸிஜன் திறனை அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நமது மூளையையும் ஆக்டிவேட் செய்து பாசிட்டிவாக வைத்திருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications