திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை.. ஒருமனதாக சட்டப்பேரவையால் ஏற்கப்பட்டது! அமைச்சர் உதயநிதி
சென்னை: 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக திகழும் நம் சட்டப்பேரவையால் நம் திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. முதலில் ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார். பாதியில் நிறுத்தியதற்கு இரண்டு காரணங்களையும் அவர் கூறினார்.

ஒன்று, சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. மேலும், தமிழக அரசின் உரையில் உள்ள சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
மேலும், ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு வைத்துள்ளார். இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. ஆளுநர் ரவியிடம் முழு உரையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதல் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் அதை அவர் முழுமையாக படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இந்த நிலையில், 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக திகழும் நம் சட்டப்பேரவையால் நம் திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் - திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் - சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம். தமிழக முதல்வர் ஸ்டாலினின் சீரிய தலைமையாலும், நிர்வாகத்திறனாலும், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி வெற்றி நடைபோடுகிற நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் வாசித்தார். 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக திகழும் நம் சட்டப்பேரவையால் நம் திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது. வாழ்க தமிழ்நாடு!. இவ்வாறு அவர் கூறியிள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications