கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: அரசியலாக்கிக் குளிர்காய்வதுதான் பாஜகவின் வேலையா? கி.வீரமணி குட்டு
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை அரசியலாக்கி குளிர்காய்வதுதான் பாஜகவின் வேலையா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் ஒரு காரில் காஸ் சிலிண்டர் வெடித்து அதில் ஒருவர் இறந்தார் என்ற செய்தி 23.10.2022 அன்று வந்தவுடனேயே, நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை அதிகாரிகளான டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் ஆகியோரை கோவைக்கு விரைந்து, முழு விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு இயந்திரத்தை வேகமாக முடுக்கிவிட்டார்.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் காலதாமதத்திற்குச் சிறிதும் இடந்தராமல், அதுபற்றிய தகவல்களைத் திரட்டித் தந்ததோடு, அது சம்பந்தமான புலனாய்வினையும் மேற்கொண்டு நடத்தி, கைது செய்யவேண்டிய குற்றவாளிகளையும் (உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கர், முகமது அசாருதீன், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில்) கைது செய்துள்ளனர். மேல்நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்!

பாஜகவுக்கு கண்டனம்
தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதா வெறும் வாயை மெல்லும் பா.ஜ.க. மற்றும் சில எதிர்க்கட்சியினர் இதை அரசியல் மூலதனமாக்கிட முயல்வது எவ்வகையிலும் நியாயமாகாது; அறச்செயலும் ஆகாது! இந்தக் கொடுமை வன்மையான கண்டனத்திற்குரியது.மதவெறியை எதிர்த்து நாட்டில் நடைபெறும் இன்றைய அறப்போர் மற்றும் அரசியல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருபோதும் ஜாதி, மதக் கண்ணோட்டம் எவருக்கும் தேவையில்லை. ஜாதி வெறி, மதவெறி அடிப்படையில், எந்த ஜாதி, எந்த மதத்தவராயினும் குற்றமிழைத்தவர்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்குமானால், இதில் தயவு தாட்சண்யம் காட்ட ஒருபோதும் தி.மு.க. அரசு தயங்காது என்பதை மதவெறி சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளில் நிரூபித்துக் காட்டி வருகிறது; அதில் இந்த கோவை வழக்கிலும் - குற்றவாளிகள் எந்த மதத்தவராக இருந்தாலும், நடவடிக்கை தயவு தாட்சண்யமின்றி பாயவே செய்கிறது!

வெறுப்பு அரசியல் கூடாது
இதுபோன்ற நேரங்களில், வெறுப்பு அரசியல் பின்னணியில் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருப்பதும் மிகவும் முக்கியம்.பார்க்கவேண்டுமே தவிர, குற்றமிழைத்தவர்கள் யார் என்று பார்த்து, அதற்கேற்ப தண்டனையில் வன்மை, மென்மையாகத் தருவது - மனுதர்மச் சட்ட காலமாகும். தற்போதைய குற்றவியல் சட்டத்தில் அது நீக்கப்பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியரால்! தீவிரவாதம் - பயங்கரவாதம் ஓர் ஆபத்தான மனநோய்! அதற்கு பயிற்சிக் களங்கள் எந்தெந்த கட்சிகள் என்பதும் நாடறிந்த செய்தியாகும்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நேற்று (26.10.2022) தலைமை அதிகாரிகளுடன் (உள்துறை சம்பந்தப்பட்ட) ஆலோசித்து, அதன்படி சிறிதும் தாமதிக்காமல், இதில் வேறு சில மாநிலங்களில் உள்ளவர்களோடு குற்றம் இழைத்தோருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்பதால், இந்த விசாரணையை என்.அய்.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமைக்கு ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார். இதை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும்கூட வரவேற்றுள்ளார்.

கடையடைப்பு நடத்துவது கண்டனத்துக்குரியது
இப்படி நடவடிக்கைகள் முறையாக நடந்து வருகையில், பா.ஜ.க. கடையடைப்பு என்று போராட்டம் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்! அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க. தலைவரானதிலிருந்து எங்கு, எது நடந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தி.மு.க. அரசுக்கு எதிராக நடத்தி, கட்சி வளர்ச்சிக்கான கனவு காணுகிறார். இதுவரை தமிழ்நாட்டு மக்களின் உரிமை - கல்வி, உத்தியோகம், மருத்துவம், தொழில் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்குவதற்கு அதிக நிதி உள்பட ஏதாவது தமிழ்நாட்டு வளர்ச்சிக்குரியதை மய்யப்படுத்தி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டா? ''பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட'' நினைத்தால், அக்கட்சிக்கு மிஞ்சுவது ஏமாற்றமே! தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். பள்ளிக் கூடங்கள் முதல் எதுவென்றாலும் உடனே ஆர்ப்பாட்டம், தேர்வில் ஆள்மாறாட்டவாதியைக் கைது செய்தால், அதனை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் என்றால், வெட்கப்படவேண்டாமா, பா.ஜ.க.? எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை!

ஆளுமை பற்றி தெரியாத ஆளுமைகள்
மனித உயிர்களுடன் விளையாடும் பெருங்குற்றங்களான இதுபோன்றவற்றில் எந்த ஓர் அரசியல் கட்சி அரசியலாக்கி, அந்த நெருப்பில் குளிர் காய நினைப்பது மிக மோசமான சமூக விரோத நடவடிக்கையாகும்! உடனே எந்தெந்தப் பிரிவில் நடவடிக்கை என்றெல்லாம் ஏதோ ''அதிகாரத்திற்குத் தாங்களே ராஜாக்கள்'' போல சிலர் பேசுவது, அவர்களது ஆளுமைபற்றித் தெரியாத அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். பேச்சு முக்கியமல்ல - செயல்தான் முக்கியம் - இதுவே நமது முதலமைச்சரின் அணுகுமுறை. இதுபோன்ற விசாரணையில், பல்வேறு செய்திகளை உடனடியாக புலனாய்வுத் துறை உரிய தலைமைக்கு மட்டும் தெரிவித்து, நடவடிக்கையை மேற்கொள்வதுதான் வழமை; எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்திவிட முடியாது; கூடவும், கூடாது என்பது கனிந்த நிர்வாக அனுபவம் உள்ளவர்களின் மூதுரையாகும்! அதுபோலவே, ''முதலமைச்சர் போன்றவர்கள் ஏன், இதுபற்றிக் கருத்துக் கூறவில்லை'' என்று கேட்பது ஏற்கத்தக்கதல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு முதலமைச்சர் பதில் கூறிக்கொண்டே இருக்கவேண்டுமா?
உடனே அவசரப்பட்டு விளம்பர வெளிச்சம் தேடக்கூடியவர் அல்ல நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; செயல்தான் அவரது ஆயுதம்; பேச்சல்ல! அவசர ஆத்திர அரசியல்வாதிகளே, புரிந்துகொள்ளுங்கள்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications