மத்திய அரசு ஊழியர்களுக்கு.. வழங்கப்படும் ஆடைப்படி விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி எவ்வளவு வரும்?
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆடைப்படி விதிகளில் (Dress Allowance) முக்கிய மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 30, 2025-க்குப் பிறகு பணியில் சேரும் புதியவர்கள் மற்றும் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்துடன் விகிதாச்சாரப்படி ஆடைப்படி வழங்கப்படும். அதே சமயம், அக்டோபர் 2025 முதல் ஓய்வுபெறுபவர்களுக்கு அதிகமாக செலுத்தப்பட்ட தொகை வசூலிக்கப்படும்.
ஆடைப்படி விதிகளில் (Dress Allowance) மாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத சம்பளத்துடன் ஆடைப்படி சேர்க்கப்படுகிறது. அகவிலைப்படி (DA) 50% அதிகரிக்கும்போது, இந்த ஆடைப்படி 25% உயர்த்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆடைப்படி ஏற்கனவே அனைத்து தகுதியான ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

ஜூலை 2025-க்குப் பிறகு ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு ஆடைப்படி வழங்குவது குறித்து, ஜூன் 16, 2025 தேதியிட்ட OM-இல் நிதி அமைச்சகத்திடம் தெளிவுபடுத்தக் கோரப்பட்டதாகவும், அதுவரை மார்ச் 5, 2020 தேதியிட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதன் மூலம் நிலைத்தன்மையையும் சீரான தன்மையையும் பராமரிக்க முடியும். இந்த புதிய அறிவுறுத்தல்கள் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஆடைப்படி, ஊழியரின் ஓய்வுபெறும் தேதியைப் பொறுத்து முழு அல்லது பாதி விகிதத்தில், ஜூலை மாத சம்பளத்துடன் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 2025 முதல் ஆண்டின் நடுவில் ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஆடைப்படி வழங்கப்படும். அக்டோபர் 2025 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்களிடமிருந்து அதிகப்படியான விகிதாச்சாரத் தொகை வசூலிக்கப்படும். செப்டம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்றவர்களிடமிருந்து எந்தத் தொகையும் வசூலிக்கப்படாது.
ஆடைப்படிக்கு தகுதி உண்டு
புதிதாக பணி நியமனம் பெட்ரா ஊழியர்கள் குறித்து, சில அலுவலகங்களில் ஜூலை 2024-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, கடந்த ஆண்டுக்கான ஆடைப்படி ஜூலை 2025 சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்று அரசு குறிப்பிட்டது.
ஜூன் 16, 2025 அன்று வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரை பணியில் சேர்ந்த அனைத்து புதிய ஊழியர்களுக்கும் ஆடைப்படிக்கு தகுதி உண்டு என்பதை சுற்றறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அடுத்த மாதம் அகவிலைப்படி (DA) 55% இலிருந்து 58% ஆக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இந்த 3% உயர்வு, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பெரும் நிம்மதியை அளிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு, பண்டிகைக் காலத்தில் நிதிச்சுமையைக் குறைத்து, வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அகவிலப்படியை ஆண்டுக்கு இருமுறை திருத்துகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கும் என இது கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜனவரி-ஜூன் சுழற்சிக்காக அகவிலப்படி 53% இலிருந்து 55% ஆக 2% உயர்த்தப்பட்டது.
தற்போது, ஜூலை-டிசம்பர் காலத்திற்கான 3% அகவிலப்படி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.












Click it and Unblock the Notifications