இனி குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது.. ஆன்லைன், யு.பி.ஐ பேமெண்ட் மட்டுமே? எப்படி செலுத்துவது?
சென்னை: இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் இந்த மாற்றம் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது குடிநீர் வரி அளிப்பதற்கு பணிமனை அலுவலகங்களில் தனி அறைகள் செயல்பட்டு வருகின்றன. நமக்கு வர கூடிய குடிநீர் வரி அளவை பொறுத்து நேரடியாக சென்று இந்த அலுவலகங்களில் கட்டணம் செலுத்த முடியும்.

இந்த நிலையில்தான் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. முன்பெல்லாம் இங்கே வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டும். இதை தடுக்கும் விதமாக : இன்று முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் சென்னை குடிநீர் வாரியத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வகைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
டிஜிட்டல் மயம்: தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகள் பலவும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.
அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும். இந்த புதிய முறை மூலம் நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இதன் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் பணம் பஞ்சாயத்து அளவில் திருடப்படாமல் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லும். இதனால் பஞ்சாயத்துகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications