வருதப்பா வருதப்பா காவிரி தண்ணீர் வருதப்பா.. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருதப்பா
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் செல்லும் சோதனை ஓட்டம் இன்று இன்று நடைபெறுகிறது.
சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. , இத்திட்டத்திற்கு ரூ.65 கோடிநிதியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்த பணிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிரமாக நடந்து வந்தது. தற்போது 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி சோதனை ஓட்டம் இன்று (9-ம் தேதி) நடைபெறுகிறது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று கூறுகையில் "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்வே வேகன்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. ஊழியர்களின் கூட்டு முயற்சியால் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் இருந்து பார்ச்சம்பேட்டை வரை குழாய் புதைக்கும் பணி நடந்துவீட்டது. மேலும் மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரை ஏற்ற அங்கு பைப்லைன்கள் மற்றும் வால்வுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துவிட்டது என்றனர்.
இதனால் நேற்று இரவே மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் பம்பிங் செய்து சேமித்து வைக்க தொடங்கி உள்ளார்கள். இந்த தண்ணீர் பார்ச்சம்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 5-வது நடைமேடையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் இன்று நிரப்பப்படுகிறது. திட்டமிட்டபடி ஜூலை 10-ம் தேதி முதல் சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications