பூந்தமல்லி டூ போரூரில் ரயில் ஓடப்போகுது.. ஸ்ரீசிட்டி டூ சென்னை.. மெட்ரோ சொன்ன குட்நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோவின் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வர இருக்கிறது. முதலில் பூந்தமல்லி பணிமணையிலும், அடுத்து பூந்தமல்லி போரூர் வழித்தடத்திலும் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன.

வழித்தடம் 4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன. வழித்தடம் 5 மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளன.
இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்த பின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டுநர் இல்லாத 36 மெட்ரோ ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் தந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்தது. இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
தற்போது பூந்தமல்லி - போரூர் வரையான பாதையில் மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு நவம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ள சென்னை மெட்ரோ நிர்வாகம், அதற்கு ஏற்ப, பல்வேறு இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ அதிகாரிகள், இந்த ரயில் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் பரிசோதிக்கப்படும் என்றார்கள். பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் இரண்டு மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் இதற்கான மெட்ரோ ரயில் தண்டவாளம் தயாராக உள்ளதாகவும் கூறிய அதிகாரிகள், 3 மாதத்துக்கு பிறகு, பூந்தமல்லி - போரூர் உயர்மட்டப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்கிறார்கள்.
இதற்கிடையில், வரும் அக்டோபர் இறுதியில் அடுத்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வரும் என்று கூறிய அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வந்தடையும் என்றும் அதன்பிறகு, 3 அல்லது 4 மெட்ரோ ரயில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications