கோடையில் ஜில்லென்று பெய்த மழை..உயிர் பெற்ற குற்றால அருவிகள்..திற்பரப்பில் உற்சாக குளியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்மழையால் வெப்பம் தணிந்துள்ளது. குற்றால அருவிகளிலும் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. ராதாபுரத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 8.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

 Drizzling rain in summer Enthusiastic bathing in People Courtallam and Tirparappu waterfalls

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கன்னடியன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பின்னர் இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியனில் 32 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 26 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

நெல்லை மாநகர பகுதியில் சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. தொடர் மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ராமநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதி அணையில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவி நயினாரில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்துவரும் கோடை மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

 Drizzling rain in summer Enthusiastic bathing in People Courtallam and Tirparappu waterfalls

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. ஒருசில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டியில் பலத்த மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 56 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 49.5 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடி, பொற்றையடி, சாமிதோப்பு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 48.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் விழுவதால் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். மே 3 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் கோடை விடுமுறையை கொண்டாட வந்துள்ள சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+