சென்னை, காஞ்சிபுரத்தில் ட்ரோன்கள் 3 நாட்களுக்கு பறக்க தடை... காரணம் என்ன?
சென்னை: தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், தேசிய பாதுகாப்பு படை சென்னையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, சென்னை காவல்துறை ஆணையரகத்தில் டேபிள் டாப் பயிற்சி என்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் என்எஸ்ஜி மற்றும் பிற துறைகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்தாய்வு குறித்து எடுத்துரைத்தார்.

இதில் உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் நிர்வாகம், பொதுத்துறை, மத்திய நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகராட்சி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், சென்னை துறைமுக ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், கடலோர பாதுகாப்பு குழு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர போக்குவரத்து கழகம், ரயில்வே, சென்னை பெருநகர காவல், பொதுப்பணித்துறை மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உள்பட 28 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியும் நடைபெற உள்ளது. இதனால் 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தருவதையொட்டி, நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications