ரொம்ப முக்கியம்! மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று முதல் ட்ரோன் தடை! செஸ் ஒலிம்பியாடிற்கு தீவிர ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் இருக்கும் பூஞ்சேரி பகுதியில் ட்ரோன் கேமரா பறக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் தடை விதித்து இருக்கிறார்.

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் சாலைகள் பல இடங்கள் புனரமைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று சென்னை நேப்பியர் பாலம் கூட செஸ் போர்ட் போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டது.

பணிகள்

பணிகள்

அங்கு நடைபெறும் ஆயத்த பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவும் இன்று ஆய்வு செய்ய உள்ளது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. வரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

இந்தியாவில் செஸ் தலைநகரம் தமிழ்நாடு ஆகும். ரஷ்யாவில் நடக்க இருந்த இந்த தொடர் உக்ரைன் போர் காரணமாக இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் வேறு நகரங்கள் பரிசீலனை செய்யப்படாமல் நேரடியாக தமிழ்நாடு பரிசீலனை செய்யப்பட்டது. இப்போட்டியில் ஏறத்தாழ 187 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டி நடைபெறும் இடத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

செஸ் தலைநகரம்

செஸ் தலைநகரம்

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இருக்கும் பூஞ்சேரி பகுதியில் ட்ரோன் கேமரா பறக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் தடை விதித்து இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த செஸ் தொடர் முடியும் வரை அந்த பகுதியில் ட்ரோன் பறக்க முடியாது. பல நாட்டு வீரர், வீராங்கனைகள் வருவதால் அங்கு இந்த ட்ரோன் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரோன்

ட்ரோன்

அதோடு மாமல்லபுரத்தில் உள்ள சோழி பொய்கை குளம், மாமல்லபுரம் நுழைவாயில்,கடற்கரைக் கோவில் வளாகம், குட்டை ஆகியவை அங்கு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் போட்டி நடைபெறும் இடத்தில் சர்வதேச அளவிலான அரங்கம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. போட்டி நடைபெறும் இடத்தையும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தையும்,அதற்கான பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அங்கு உலக தரத்தில் இதற்காக அரங்கு தயாராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+