சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் “ரோலக்ஸ்” ஊடுருவலா? வெளியான "ஷாக்" தகவல்.. உலகின் மிகக்கொடிய போதை மாஃபியா தலைவனாம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் மிகக்கொடி போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் என்று பல நாடுகளால் எச்சரிக்கப்பட்டு இருக்கும் நாஜிம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பித்து வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர காவல் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாகவே அவர் ஊடுருவியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

உலகளவில் ஹெராயின், கொக்கையின்போன்ற விலை உயர்ந்த ஆபத்தான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் தலைவனாக அறியப்படுபவர் முகமது நாஜிம். உலகின் பல நாடுகளின் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாவாக அறியப்படுகிறார்.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் நாஜிம்.

ரூ.2.60 கோடிக்கு ஏலம்போன விவ்ராந்த்.. ரஷீத் கான் இடத்தில் இளம் வீரர்.. ஹைதராபாத் அணி வாங்கியது ஏன்? ரூ.2.60 கோடிக்கு ஏலம்போன விவ்ராந்த்.. ரஷீத் கான் இடத்தில் இளம் வீரர்.. ஹைதராபாத் அணி வாங்கியது ஏன்?

தப்பிய நாஜிம்

தப்பிய நாஜிம்

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை நீதிமன்றம் நாஜிமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் இலங்கையில் இருந்து தப்பி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தமிழ்நாட்டிற்குள் ஊடுருவல்

தமிழ்நாட்டிற்குள் ஊடுருவல்

இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக பலர் தப்பி வரும் சூழலில் போதை கடத்தல் மன்னன் நாஜிம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த நிலையில் நாஜிம் தமிழ்நாடு வழியாக ஊடுருவியது தொடர்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அன்புமணி கருத்து

அன்புமணி கருத்து

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை

மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை

எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது. முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?

துபாயில் கைது

துபாயில் கைது

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.

போதை மருந்து கலாச்சாரம்

போதை மருந்து கலாச்சாரம்

தமிழ்நாட்டில் போதை மருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Nazim who has been warned by many countries as the leader of the world's most notorious drug trafficking gang, has escaped from Sri Lanka to Tamil Nadu. In this situation, PMK leader Anbumani Ramadass said that he penetrated due to the negligence of the Coast Guard and Tamil Nadu Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X