போதைப் பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக் எங்கே.. தேடுதல் வேட்டை.. வீட்டிற்கு சீல் வைத்த போலீஸ்
சென்னை: போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வீட்டின் முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் ஒட்டிய நிலையில் தற்போது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
டெல்லியில், போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுக்கு பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் இருப்பது விசாரணையில் அம்பலானது. சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது.
கடத்தல் சம்பவத்தில் தம்மை போலீஸ் தேடுவதால் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் நேரில் ஆஜாராக கூறப்பட்டு இருந்தது. அவர் ஆஜராகாத காரணத்தால் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனை அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!












Click it and Unblock the Notifications