டண்டணக்கா.. டண்டணக்கா.. நீ குத்துப் பாட்டுக்கு ஆடுக்கா.. தேர்தல் முடியும் வரை நாங்க ரொம்ப பிசி!
பிரச்சாரங்களில் டிரம்ஸ் கலைஞர்களுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
Recommended Video

சென்னை: இந்த தேர்தலில் கட்சி தலைவர்களை விட, ஏன் வேட்பாளர்களைவிட ரொம்பவும் பிசியாக இருப்பது யார் தெரியுமா? இந்த டிரம்ஸ் கலைஞர்கள்தான்!
தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் டிரம்ஸ் சத்தம்தான் கேட்டு கொண்டே இருக்கிறது. இவர்கள் காட்டில்தான் இப்போது மழை!
பொதுவாக நலிந்த கலைஞர்கள்தான் இவர்கள். முன்பெல்லாம் எந்த விழாக்கள் என்றாலும் இவர்களுக்கென்று ஒரு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் தேர்தல் சமயத்தில்தான் இவர்களுக்கு மவுசு கூடுகிறது.

இவர்களுக்கு கட்சின்னு எதுவும் கிடையாது.. ஒரே தலைவர்ன்னு யாரும் இல்லை.. காசு தர்றவங்க எல்லாம் தலைவன்தான்! ஒவ்வொரு இடத்திலும் வேட்பாளர்களுக்கு முன்பு ஆஜர் ஆகி இருப்பது இவர்களும் இவர்கள் எழுப்பும் ஓசையும்தான்!
வேட்பாளர் வரும்வரை அடித்து பட்டையை கிளப்புவதுதான் இவர்கள் வேலை! இந்த சத்தத்தை கேட்டாலே தொகுதி மக்கள் யார் பிரச்சாரத்திற்கு வரப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகிறார்கள். டிரம்ஸ் சத்தத்துக்கு தொகுதி மக்களில் சிலர் தங்களையும் அறியாமல் குத்தாம் போட்டால் இவர்களின் டிரம்ஸ் சத்தமும் கொஞ்சம் ஜாஸ்தியாவே தாளம் போடுகிறது!
வேட்பாளர் அங்கு வந்து சேருவதற்கு முன்னமேயே அடுத்த மீட்டிங்குக்கு இவர்களை அழைத்து கொண்டு போக ஆட்கள் ரெடியாக இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு செம பிஸி! வேட்பாளர் வந்ததும்தான் தாமதம்.. சட்டுபுட்டினு எல்லாத்தையும் பேக் செய்துகொண்டு அடுத்த இடத்தில் கச்சேரிக்கு ஆஜராகி இருப்பார்கள்! எப்படியோ இந்த தேர்தல் மூலம் இவர்களாவது பிழைத்தால் நமக்கு சந்தோஷம்தான்!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications