சென்னையில் குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் கோர விபத்து.. 2 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
சென்னை: வில்லிவாக்கத்தில் இன்று காலை குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகரில் இன்று காலை இன்னோவா கார் ஒன்று அசுர வேகத்தில் தறிகெட்டு வந்து கொண்டிருந்தது. திடீரென அங்கிருந்த மின் கம்பத்தின் மீது அந்தக் கார் மோதியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி அருகில் சென்று பார்த்தார். அப்போது எதிர்பாரதவிதமாக, ரிவர்சில் வந்த கார், சரோஜா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரோஜா உயிரிழந்தார்.

பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
இதைத்தொடர்ந்து தெருவுக்குள் நுழைந்த அந்த கார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆதிலட்சுமி, மோகன கோபால் ஆகியோர் மீதும் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இருவர் மீதும் மோதும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

மடக்கிப்பிடித்த மக்கள்
இந்த விபத்தில் மோகன கோபால் சம்பவ இடத்தில் பலியானார். ஆதிலட்சுமி என்பவருக்கு கால் முறிந்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி இரண்டு உயிர்களை பலிவாங்கிவிட்டு நிற்காமல் சென்ற அந்த காரை அப்பகுதி மக்கள் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

மண்ணடி தேவேந்திரன்
பின்னர் மதுபோதையில் இருந்த காரின் ஒட்டுநரை வெளுத்து பின்னர் வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் குடித்து விட்டு காரை ஓட்டி 2 பேரின் உயிரை குடித்த அந்த நபர் மண்ணடியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது.

வழக்குப்பதிவு
அவரை கைது செய்த போலீசார் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது, விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காலையிலேயே நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
Thoppur NH: திகில்கள் நிறைந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு "ரெட் கார்டு"! தேசிய நெடுஞ்சாலை அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து.. கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு.. கரூரில் காலையிலேயே சோகம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பொன்னேரி அருகே கார் கவிழ்ந்து பலி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications