பங்குனி வெயில் பட்டையை கிளப்புது... வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமாம் - வானிலை அறிவிப்பு
பங்குனி மாத வெளியில் பட்டையை கிளப்ப ஆரம்பித்து விட்டது. இப்போது உள்ள இயல்பான நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: பங்குனி மாத வெயில் காலை பத்து மணிக்கே சுட்டுப்பொசுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சேலம், கரூரில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
தை மாதம் சூரியனுக்கு நாம பொங்கல் வைக்கிறதும்... சித்திரையில சூரியன் நமக்கு பொங்கல் வைக்கிறதும் சகஜம்தானேப்பா என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் விதம் விதமாக சூரியனுக்கு மீம்ஸ் போடுவார்கள். இதோ கோடை காலம் தொடங்கி விட்டது.
மார்ச் 16ஆம் தேதியான இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயரும் வெப்பநிலை உயரும்
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.

தெளிவான வானம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை
வரும் 20ஆம் தேதியன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதமடித்த வெயில்
http://imdchennai.gov.in/tamiltemp_max.pdf
15ஆம் தேதியன்று மாலையில் பதிவான வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சேலம், கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, கோவையில் 95.9 டிகிரி பாரன்ஹீட் அதாவது 35.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வேலூரில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications